புதன், நவம்பர் 09, 2011

இந்தியாவின் இணையதள பயனர்கள் 100 மில்லியன் தாண்டியது - ஒரு தகவல்


 இணையதளத்தை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை வேகமாக உலகம் எங்கும் வளர்ந்து வருகிறது .   இந்த அசூர வளாச்சி இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது .   இதன் விளைவாக இந்தியாவின் மொத்த இன்டர்நெட் பயனர்கள் 112  மில்லியன்  ( செப்டம்பர் முடிவில் ) எனக் கணக்கிடப்பட்டுள்ளது .


 உலகம் முழுவதிலும் இணையத்தை அதிகம் பயன்படுத்துபவர்களில் சீனா முதல் இடத்திலும்  ( 485 மில்லியன் ) ,  அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் ( 245 மில்லியன் ), தற்பொழுது இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது .   2013 ம் ஆண்டில் இந்தியா அமெரிக்காவை முந்தி முதல் இடத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .  அட ...!

ஒவ்வொரு மாதத்திலும்  இணையத்தை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 5  முதல் 7  மில்லியன் அதிகமாகி வருகிறது என கணக்கிடப்பட்டுள்ளது .   அடுத்த 5  வருடங்களில் இந்தியாவின் மொத்த இணையப் பயனர்கள் 600 மில்லியன் யை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது .  2015 ம் வருடத்தில் இணையத்தின் மூலம் சுமார் 20 பில்லியன் ரூபாய் அளவுக்கு இந்தியாவில் வியாபாரம் நடக்கும் என Associated Chambers of Commerce and Industry of India கூறியிருப்பது கூடுதல் தகவல் .
  

டிஸ்கி  :  உன்னை போல வேலை வெட்டி இல்லாமல் ப்ளாக் எழுதுகிறவர்கள் இருக்கும் போது 600  மில்லியன் என்ன 1000 மில்லியன் கூட இந்தியா தாண்டும் ..அப்படின்னு என்னை அன்போடு திட்டுகிற அன்பு நெஞ்சங்களுக்கு நான் சொல்லும் தகவல் என்னவென்றால் " இணையத்தை நன்கு பயன்படுத்துங்கள் ..  ஆனால்  நல்லதை மட்டும் பாருங்கள்  , நல்லதை மட்டும் கேளுங்கள் , நல்லதை மட்டும் பிறர்க்கு சொல்லுங்கள் "


Related post



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக