சனி, செப்டம்பர் 17, 2011

இப்படியும் சில கின்னஸ் சாதனைகள் - ஒரு பார்வை

கின்னஸ் சாதனைகள் என்றவுடன் நமக்கு தெரியும் அது ஒரு உலக சாதனை என்று.  இங்கே சிலரின் உலக சாதனைகளை நீங்களே பாருங்களேன்.  
 
1 .)   மிக நீண்ட தாடி : -
        உலகின் மிக நீண்ட தாடியை உடைய இவரின் பெயர் சர்வான் சிங் .  கனடாவில் வசிக்கிறார்.   இவரது தாடியின் நீளம் 7  அடி 9  அங்குலம் என்றால் இவரின் சாதனை பெரியது தான்.
 
 
2 .)  மிக பெரிய வாய் : -
       உலகின் மிக பெரிய நன்கு விரியத்தக்க வாய் இவருக்குதானாம்.   பெயர் டோமிங்கோ ஜோக்கிம்.  இவரது வாய் 6 . 6  இன்ச் அளவுக்கு விரியுமாம்.
 
 
3 .)  மிக பெரிய மூக்கு : -
     உலகின் மிகப் பெரிய மூக்குக்கு சொந்தக்காரரான இவரது பெயர் மேகமுத் .   துருக்கி நாட்டை சேர்ந்த இவரது மூக்கின் நீளம் 3 .46  இன்ச் என்பது குறிப்பிடத்தக்கது.


 
4 .)  இப்படியுமா ...?
        இந்தியாவை சேர்ந்த மனோகரன் என்பவர் 30  வினாடிகளுக்குள் 200  மண் புழுக்களை விழுங்கி சாதனை படைத்துள்ளார்.   மட்டுமல்ல ஒரு பாம்பை தன் மூக்குக்குள் விட்டு வாய் வழியே எடுத்தாராம் 
 
 
 
இதெல்லாம் பார்த்தவுடன் உங்களுக்கும் எதோ செய்ய தோன்றுகிறது என்று நினைக்கிறேன்.  கவலப்படாதீங்க ... உடனே நம்ம பிளாக்கில எழுதிடலாம்

வெள்ளி, செப்டம்பர் 16, 2011

விலையேறி போச்சு பெட்ரோல் - விளங்கியதும் .. விளங்காததும்


காலையில் தான் ஊருக்கு போய் விட்டு வந்தவுடன் பைக்குக்கு பெட்ரோல் போடுவதற்கு போனேன்என்னை பார்த்தவுடனே பெட்ரோல் போடும் நபர் சொன்னார் " சார் ... விலை கூடி போச்சுரூபாய் 14  காசு " .  சத்தம் போடாமல் பெட்ரோல் போட்டு விட்டு வந்து இதை பற்றி கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தேன் .   கொஞ்சம் விளங்கியதுகொஞ்சம் விளங்கவில்லை ( மரமண்டை என்று நீங்கள் சொன்னால் கூட பரவாயில்லை )


விளங்கியது ...!
பெட்ரோல் விலை கூடும் போதெல்லாம் இப்படி ஒரு வார்த்தையை எல்லாரும் சொல்லுவார்கள் " சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை ஏறி விட்டதுஎன்று.   அது என்ன ... சர்வதேச சந்தை என்று நீங்கள் நினைக்கலாம்ஒபெக் என்று ஒரு கூட்டமைப்பு உள்ளதுஉலகில் உள்ள கச்சா என்னை ஏற்றுமதி செய்யும் சில நாடுகள் சேர்ந்து ஏற்ப்படுத்தி கொண்ட கூட்டமைப்பு.   அல்ஜிரீயாஅங்கோலாஈகுவடார்ஈரான் , ஈராக்,   குவைத் ,   லிபியா ,   நைஜீரியா,   கத்தார் ,   சௌதி அரேபியா ,   ஐக்கிய அரபு எமிரேட்ஸ்   மற்றும்  வெனிசுலா   ஆகிய  நாடுகள்  இப்பொழுது  இந்த கூட்டமைப்பில் உள்ளது.   


இவர்கள் தான் ஒட்டு மொத்த உலகின் எண்ணெய் விலையை நிர்ணயம் செய்கின்றனஇந்த நாடுகளுக்கு எண்ணையை விட்டால் வேறு ஒன்றும் கிடையாதுஅதனால் இந்த நாடுகள் எல்லாமே எண்ணையை நம்பித்தான் இருக்கின்றன என்றால் அது பெரிய உண்மைஅதனால் வெகு வேகமாய் குறைந்து வரும் எண்ணெய் வளத்தை இன்னும் கொஞ்ச வருடங்களுக்கு நீடிக்க இவைகள் உற்பத்தியை குறைத்து விட்டனஆனால்  தேவை தான் உங்களுக்கே தெரியுமே ..

இவர்களிடம் இருந்து உலக நாடுகள் பேரெல் ( BARREL ) என்ற கணக்கில் எண்ணையை வாங்குகின்றன.   அது என்ன BARREL  என்று நினைக்கலாம்நாம் பொதுவாக BARREL  என்றால் 200  லிட்டர் என்று நினைப்போம்ஆனால் 1  BARREL  கச்சா எண்ணெய் என்னப்படுவது  42  யுஎஸ் கேலன் அதாவது கிட்டத்தட்ட 159  லிட்டர் என்று பொருள் படும்


அது என்ன கச்சா எண்ணெய் என்று கேட்கலாம்இது தான் பூமியில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்பிறகு இதை சுத்திகரித்து பின்வரும் பல பொருட்களை பிரித்தெடுப்பர்.   நாப்தா ,  வெள்ளை பெட்ரோல்                ( விமானங்களுக்கு ) ,   சாதாரண பெட்ரோல்  ,  டீஸல்   என்ஜின் ஆயில் ,  கியர் ஆயில் ,  கிரீஸ் மற்றும் தார்

2010  -  2011  வருடத்தில் சராசரியாக 85 .09  டாலராக ( ஒரு BARREL  ) இருந்த கச்சா எண்ணெய் போன ஆகஸ்ட் மாதத்தில் 106 .94  டாலராக மாறி இந்த மாதத்தில் 111 .64  டாலராக ( ஒரு BARREL )  உயர்ந்துள்ளதுகிட்டத்தட்ட சென்ற நிதி ஆண்டில் இருந்து 31 % உயர்ந்துள்ளதுஅதனால் தான் விலைருபாய் 14  காசு உயர்ந்துள்ளது என்கிறது அரசு.   நானும் கொஞ்சம் புரிந்து கொண்டேன்.

விளங்காதது :
1 . எண்ணெய் நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட 5300  கோடி இழப்பு ஏற்படும் என்று அறிக்கைகள் சொல்லுகிறது.   இருப்பினும்லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் அதன் அதிகாரிகள் தாங்கள் வாங்கும் சம்பளம் போதாது என்று போராடுவது விளங்கவில்லை.

2 . நட்டமாய் ஓடி கொண்டிருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் நவரத்னாமகாரத்னா  என்ற அந்தஸ்துக்கு எப்படி உயர்த்தப்படுகிறது என்பதும் விளங்கவில்லை.

3 . பல பெரிய விளம்பரங்கள் கொடுத்து எண்ணெய் விற்ப்பனையை பெருக்கிநஷ்டத்தை அதிகமாக்கும் ரகசியமும் விளங்கவில்லை.  

4 . எத்தனை முறை விலையை கூட்டினாலும்வாகன தேவையை குறைக்காமலும் , வாகன எண்ணிகையை அதிகமாக்கி கொண்டே இருக்கும் என்னை போன்றவர்களின் மன நிலையும் விளங்கவில்லை

இந்த பதிவு உங்களுக்கு விளங்கினாலும் விளங்காவிட்டாலும் உங்கள் விளக்கத்தை கொஞ்சம் விளக்கலாமே ....

டிஸ்கி  :   சீக்கிரம் பைக்கை கொடுத்துவிட்டு நல்ல குதிரை ஏதாவது வாங்கணும்நல்ல குதிரை இருந்தால் அதையும் சொல்லுங்களேன்




செவ்வாய், செப்டம்பர் 13, 2011

அற்புதமான அறிவியல் - இன்று ஒரு தகவல்

உயரமான இடங்களுக்கு செல்ல நம்ம ஊர்களில் பெரிய ஏணிகளை பயன்படுத்துவதை நாம் பார்த்திருக்கிறோம்நகரங்களில் மிக உயரமான கட்டடங்களுக்கு செல்ல மின் ஏணியை ( அதாங்க லிப்ட் ) பயன்படுத்துகிறார்கள்.   இதையே நாம் ஏன் விண்வெளிக்கு பயன்படுத்த கூடாது என்று நினைத்ததின்  விளைவு தான் இந்த விண்வெளி ஏணி ( SPACE LADDER ).

 

பூமியிலிருந்து விண்வெளிக்கு அடிக்கடி விண்வெளி ஓடங்களை அனுப்புவதை காட்டிலும் ஒரு ஏணி ஓன்று இருந்தால் ( படத்தில் காட்டியபடிவிண்வெளி வீரர்களுக்கு தேவையான கருவிகளும் , பொருட்களும் எளிதாக எடுத்து செல்ல முடியும் ஏன் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் இந்த முயற்சியை தொடங்கினது.

ஏறக்குறைய மூன்று முறைகள் இதற்க்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு தோல்வி அடைந்து விட்ட நிலையில் ஜப்பான் தனது சொந்த செலவில் இப்படி ஒரு ஏணியை உருவாக்க முனைந்துள்ளதுஇதற்காக கிட்டத்தட்ட 7 . 3  பில்லியன் டாலர் பணம் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.   இரும்பை விட எடை குறைந்த ஆனால் அதே நேரத்தில் இரும்பை விட 180  மடங்கு வலிமை பெற்ற 22000  மைல் நீளத்திற்கு கேபிள்கள் தயாரிக்கப்படும் என தெரிகிறது

இன்னும் முயற்சிகள் முழுமை பெறாத நிலைமையிலும் , அறிவியலில் இத்தகைய அற்புதங்கள் நடப்பது சகஜம் தானே.   சீக்கிரத்தில் பெரிய ஏணியை பார்க்கலாம் என நம்புவோம்....!



 

திங்கள், செப்டம்பர் 12, 2011

சரித்திரத்தின் வியப்பு - இன்று ஒரு தகவல்


 
ஆபிரகாம் லிங்கன் மற்றும் ஜான் எப். கென்னடி இவர்களை குறித்து அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாதுஆனால் இவர்கள் இருவரின் வாழ்விலும் நடந்த சில நிகழ்வுகள் சரித்திரத்தில் ஒரு வியப்பு என்றால் மிகை ஆகாது.



  
 


மாண்பு மிகு   ஆபிரகாம் லிங்கன்
மாண்பு மிகு   ஜான் எப். கென்னடி


இவர் US காங்கிரசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வருடம்  1846
இவர் US காங்கிரசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வருடம்  1946


இவர் அமெரிக்காவின் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வருடம்  1860
இவர் அமெரிக்காவின் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வருடம்  1960

இருவரும் மனித உரிமைக்காக குரல் கொடுத்தவர்கள்

இருவரின் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வசிக்கும் போது தங்கள் குழந்தைகளை இழந்தவர்கள்

இருவரும் வெள்ளிக்கிழமையில் தலையில் சுடப்பட்டு இறந்தார்கள்


லிங்கனின் காரியதரிசியின் பெயர் கென்னடி
கென்னடியின் காரியதரிசியின் பெயர் லிங்கன்


லிங்கன் அவர்களை கொலை செய்த ஜான் வில்கெஸ் பூத் 1839  வருடத்தில் பிறந்தான்
கென்னடி அவர்களை கொலை செய்த லீ ஹார்வே ஆஸ்வால்ட் 1939 ம் வருடத்தில் பிறந்தான்


லிங்கன் போர்ட் என்று அழைக்கப் பட்ட தியேட்டரின்  முன் சுடப்பட்டார்  

கென்னடி போர்ட் கம்பனியின் லிங்கன் என்ற காரில் செல்லும்போது சுடப்பட்டார்


லிங்கனை சுட்டவுடன் தியேட்டரில் இருந்து பண்டக சாலைக்கு கொலைக்காரன் தப்பி சென்றான்
கென்னடியை சுட்டவுடன் பண்டக சாலையில் இருந்து தியேட்டருக்கு கொலைக்காரன் தப்பி சென்றான்

பூத் மற்றும் ஆஸ்வால்ட் இரண்டு பெரும் வழக்கு முடிவதற்கு முன்பு கொல்லப்பட்டனர்


பல விஷயங்களில் ஓன்றுபட்டிருக்கும்  மாண்புமிகு லிங்கன் மற்றும் கென்னடி சரித்திரத்தின் ஒரு வியப்பு தானே...!

கீழே விழும் செயற்கை கோள் - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்

பரந்து விரிந்த விண்வெளியில் கைவிடப்படும் செயற்கை கோள்கள் , உடைந்த பாகங்கள்,  மற்றும் விண்வெளிக்கலங்களில் இருந்து சிதறிய பாகங்கள் போன்றவை குப்பைகளாக பூமியை சுற்றி வருகின்றன.  இவற்றை விண்வெளி குப்பைகள் என்று அழைப்பர்.  
 

இந்த விண்வெளி குப்பைகள் அடிக்கடி பூமியின் ஈர்ப்பு விசைக்குள் நுழைந்து விட்டாலும் ,  கடவுள் இயற்கையாகவே வைத்திருக்கிற பாதுகாப்பு மண்டலத்தால் ,  பூமிக்குள் நுழையும் முன்பாகவே எரிந்து போய்விடும் .
 
ஆனால் இப்போது புதிதாக ஒரு ஆபத்து வந்திருக்கிறது.   பல வருடங்களுக்கு முன்பு நாசா விண்வெளி ஆய்வு கூடம் அனுப்பிய UARS  ( Uppar Atmosphere  Research  Sattelite ) என்ற செயற்கை கோள் ஓன்று விண்வெளி குப்பையாக பூமியை சுற்றி வந்தது.  12500  பவுண்ட் எடையுள்ள அந்த செயற்கை கோள் இப்பொழுது பூமியின் மேல் விழக்கூடும் என்று எதிர்பார்க்க படுகிறது.


கிட்டத்தட்ட 100  மைல் வேகத்தில் 300  பவுண்ட் எடையுள்ள 26  பாகங்களில் ஏதாவது ஓன்று பூமியை தாக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   ஆனால் 3200  வாய்ப்புகளில் எதாவது 1  வாய்ப்பில் மாத்திரம் இப்படி நடக்கக்கூடும் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது.    ஆனால் பொதுவாக இவை காற்று மண்டலத்திற்குள் நுழையும் போதே எரிந்து விடும்.  அப்படியும் ஏதாவது தாக்கினால் , கடந்த 50  வருடங்களாக நடக்காத ஒரு நிகழ்வு தான் இது என்று நாசா விண்வெளி ஆய்வு கூடத்தின் பிரதான பொறியாளர் ஜோன்சன் அறிவிக்கிறார்  ( நன்றி  :  நாசா செய்திகள் ) 
 
 
பிறகென்ன .... கொஞ்சம் தலைக்கு மேல பார்த்து கொண்டே நடந்து போங்க .... ஒன்னும் ஆகாது ...