வியாழன், ஆகஸ்ட் 18, 2011

உண் நம்பிக்கை வீண் போகாது ......!


 
பரவலாக என் காதுகள் கேட்க , பலர் சொல்லியிருகின்ற்னர் "இனி மேல் நம்பிக்கை இல்லை". சில வேளைகளில் மருத்துவமனைக்கு செல்லும் போது , இந்த வார்த்தைகளை மருத்துவர்கள் சில உறவினர்களிடம் சொல்ல கேட்டிருக்கிறேன். சில வேளைகளில் மிக பெரும் போராட்டங்களை சந்திக்கும் போதும் , இந்த வார்த்தைகள் பேசப்படுகிறது. ஆனால் எங்கெல்லாம் இந்த "நம்பிக்கை இல்லை" என்ற வார்த்தைகள் வெளிப்படுகின்றதோ அங்கெல்லாம் வேதனையும் துக்கமும் நிறைந்திருக்கிறதை கவனித்திருக்கிறேன்.



புனித வேதாகமத்தில் யோசேப்பு என்கிற மனிதனை குறித்து சொல்லபட்டிருக்கிற வாக்கியங்கள் என் மனதை மிகவும் பாதித்தவை. இந்த யோசேப்பு தகப்பனால் மிகவும் நேசிக்கபட்டவன். பதினோரு சகோதரர்கள் இவனுடன் பிறந்தார்கள். ஒரு நாள் சர்வ வல்ல இறைவன் யோசேப்பின் எதிர்காலத்தை குறித்து ஒரு சொப்பனத்தை காண்பித்தார்.


நண்பனே...! நீ இதை நம்பி தான் ஆக வேண்டும். " உன்னை குறித்து ஒரு மேன்மையான திட்டம் கடவுளிடம் உண்டு". 

யோசேப்பு தன் சகோதரர்களிடத்தில் இதை சொன்ன போது, அனைவரும் அவனை பகைத்தார்கள். அவனை வெறுத்தார்கள் . அந்நியரிடத்தில் அவனை விற்று போட்டார்கள். இது அத்தனையும் நேரிட்ட போது அவனுக்கு வயது 17 .

பிறகு இன்னொரு தேசத்தில் அடிமையாக விற்கப்பட்டான். பொய்யான பல குற்றசாட்டுகள் அவன் மேல் சாட்டப்பட்டது. சிறைச்சாலையில் அடைக்கப்பட்டான்.

ஆனால் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவெனில் உலகத்தின் பார்வையில் நம்பிக்கை இல்லாத போதும் , கிட்டத்தட்ட 30 வயது வரை அவன் எல்லாவற்றையும் நம்பிக்கையோடு சகித்தான். 13 வருடங்கள் அவன் பட்ட வேதனை விவரிக்க முடியாது. ஆனாலும் அவன் தன்னை படைத்த தேவனை நம்பினான். அந்த தேவனின் திட்டம் நிச்சயமாக தான் வாழ்வில் நிறைவேறும் என நம்பினான். அது அப்படியே நடந்தது.



ஒரு வேளை அவனது நம்பிக்கை குறைந்தது என்றால் என்னவாகியிருக்கும்...? நம்மில் அநேகரை போல் விரக்தி நிறைந்த வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்திருப்பான். சற்று யோசித்து பாருங்கள்.

 உண் நம்பிக்கையின் அளவு என்ன..? நண்பா ......நடுக்கடலில் விழுந்தாலும் , கரையேற துடிக்கும் உன் நம்பிக்கை எங்கே...? தட்டி எழுப்பு. நம்பிக்கை நெருப்பு கொழுந்து விட்டு எரியட்டும். கடைசியில் ஓன்று சொல்லுகிறேன். உண் நம்பிக்கை வீண் போகாது ......!

புதன், ஆகஸ்ட் 17, 2011

ஊழல் ஒழிப்பு - யார் கையில் ...? தீர்வு தான் என்ன ....?

ஊழல் ....... எங்கு பார்த்தாலும் இந்த வார்த்தை இப்போது பேசப்படுகிறது. ஊழல் ஒழிப்பு என்ற வார்த்தையும் எங்கும் தொனிக்கிறது. அன்னா ஹசாரே போன்ற மாபெரும் தியாகிகள் ஊழலை எதிர்த்து போராடுகின்றனர். அதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தையும் ஸ்தம்பிக்க வைக்கின்றனர். பாஜக போன்ற ஊழல் அற்ற (?) பரிசுத்தமான (?) கட்சிகள் கூட போராட்டம் செய்கின்றன. அப்பாவி மக்களும் போராட்டத்தில் பங்கு கொள்கின்றனர். கடந்த சில நாட்களாக நடக்கும் போராட்டங்கள் ஊழலை ஒழிக்கவா? அல்லது மக்களை ஆளும் ஆட்சிக்கு சங்கடம் உண்டாக்கவா? என்பதை குறித்து நமக்கு கவலை இல்லை. ஆனால் உண்மையில் ஊழல் எங்கு இருக்கிறது ? யார் இதை ஊக்குவிக்கிறார்கள் ? என்று நாம் கொஞ்சம் நினைத்து பார்த்தல் தலை கொஞ்சம் சுற்ற தான் செய்கிறது.



ஊழலை சட்டங்கள் முலம் திருத்த முடியுமா?

இந்த கேள்விக்கு பதில் முடியாது என்பது தான். கொஞ்சம் யோசித்து பாருங்கள். ஊழல் மற்றும் லஞ்சம் ஆகியவற்றை ஒழிக்க தான் லஞ்ச ஒழிப்பு துறை உருவாக்கப்பட்டது. ஆனால் என்ன நடக்கிறது? அதே துறையில் லஞ்சம் வாங்கியதை குறித்து செய்திகள் வாசிக்கின்றோம். எத்தனையோ நல்ல பல சட்டங்கள் இந்தியாவில் இருந்தாலும், அவைகளை மீறி ஊழல் நடக்க தான் செய்கிறது. ஒவ்வொரு கட்சியும் , பெரிய மனிதர்களும் ஒருவரை ஒருவர் குறைதான் சொல்லுகிறார்கள் தவிர தீர்வு சொல்ல யாரும் இல்லை.



ஊழலுக்கு தீர்வு தான் என்ன?

1 . தனிமனித உணர்வு : லஞ்சம் வாங்கும் எல்லாரும் திருந்த வேண்டும். இது எப்படியும் நடக்காத காரியம் என்பது நாம் எல்லாரும் அறிவோம். திருட்டு மாங்காய் தின்றவனுக்கு அதை விட முடியாது என்பது சிறு பிள்ளைக்கு கூட தெரியும்.

2 . தனிமனித எதிர்ப்பு : இது மிகவும் முக்கியமான ஒன்று. ஒவ்வொரு தனி மனிதனும் ஊழலுக்கு எதிராய் ஒத்துழையாமை இயக்கம் நடத்தனும். உதாரணதிற்கு ஒரு மரண சான்று வாங்குவதற்கு நாம் 100 ருபாய் செலவழிக்க தயங்குவதில்லை . அப்படியெனில் ஊழலை வளர்ப்பது நாம் தான் என்றால் கொஞ்சம் அதிர்ச்சி அல்லவா?



தனி மனிதனை அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு தூண்டுபவன் தலைவன் அல்ல. தனிமனிதனை ஊழலுக்கு எதிராக உணர வைப்பவனே தலைவன். இது கொஞ்சம் வித்தியாசம் அல்லவா. நீ எதுவும் லஞ்சமாக கொடுக்காதே , லஞ்சத்தை ஊக்குவியாதே ! லஞ்சம் தானாக அழியும்.



நண்பனே ...! ஊழல் ஒழிப்பு யார் கையில் ? அன்னா ஹசாரே கையிலா ? கட்சிகளின் கையிலா ? இல்லை .... அது உன் கையில் மற்றும் என் கையில்.

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

உனக்கு ஒரு வழியுண்டு....

சில பல நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பலர் என்னிடம் சொன்னது என்னவெனில் " நான் இப்போது இருக்கும் சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியவில்லை ... ஒரு வழியும் இல்லை. எல்லாம் வழியும் அடைக்கபட்டுவிட்டது".




சிலருக்கு கடன் ஒரு பிரச்சினை. சிலருக்கு வேலை இன்மை . வேறு சிலர் ஏமாற்றம் நிறைந்த அனுபவங்களை கொண்டிருந்தார்கள்.



நான் கொஞ்சம் ஆழ்ந்து இதை சிந்தித்து பார்த்தேன். பல முறை ஆண்டவரிடமும் கேட்டேன். பல நாட்கள் கழித்து எனக்கு பதில் கிடைத்தது. நான் பெரிய தண்ணீர் சேகரிக்கும் தொட்டி வழியே கடந்து சென்றேன். அது முழுவதும் மூடபட்டிருந்தது. ஒரு நபர் அந்த தொட்டியை சுத்தம் செய்வதற்காக அதற்காக இருந்த சிறு துவாரத்தின் வழியாக சென்றார்.



இப்போது ஆண்டவரின் குரல் என் உள்ளத்தில் " நீ என்ன நினைக்கிறாய் அந்த மனிதனை குறித்து".

நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை.

இப்போது மறுபடியும் ஆண்டவர் " உள்ளே இருக்கும் அந்த மனிதன் தன்னை சுற்றி பார்த்தால் எப்படியிருக்கும்?" .

நான் சொன்னேன் " இருட்டாக ".

உடன் ஆண்டவர் கேட்டார் " அவன் இறந்து விட்டான் என நினைகிறாயா?" .

நான் சொன்னேன் " அது எப்படி..... அவன் உயிர் வாழும் வாய்ப்பு அங்கு இல்லையெனில் எப்படி அவனை அங்கு அனுப்புவார்கள். அவன் உயிர் வாழும் படி காற்று உள்ளே போகிறதே!"

ஆண்டவர் சொன்னார் " மிக சரியாக சொன்னாய் ...நீ இந்த உலகில் உயிரோடு இருக்கிறாய் என்றால் உனக்கு ஒரு வழி திறந்து இருக்கிறது என்று அர்த்தம். உன் கண்களின் பார்வைக்கு ஒரு வேளை வழி ஒன்றும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் உனக்கு ஒரு வழியுண்டு அதனால் தான் நீ ஜீவனோடு இருக்கிறாய் "



நண்பனே..... வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல. தற்காலிகம் தான். தவறான முடிவுகள் உன் வாழ்வை அழித்துவிடும். நம்பு " உனக்கு ஒரு வழியுண்டு"

திங்கள், ஆகஸ்ட் 15, 2011

உனக்கு நிகர் யாருண்டு..?

திரும்ப திரும்ப

கரையிடம் மோதும்

அலைகளை பார் நண்பனே....!




எத்தனை முறை தோற்பினும்

விரக்தி உண்டோ அவற்றிடம்...?


முயற்சி மாத்திரம்

கண் முன்னே...

முன்னேறுவது மாத்திரமே

சிந்தையில்....



நண்பனே....


கடந்த கால தோல்வியால்

தலையணையில்

முகம் புதைப்பாயோ...?

கண்ணீரால் படுக்கையை

நனைப்பாயோ ...?



நிகழ்காலம்

உனதல்லவோ.......!

வருங்காலம் வெற்றியல்லவோ....!

சற்று தலை நிமிர்ந்து பார்....

தொலைவில் தெரிகிறதா

உன் வெற்றி.....?



தொட்டு விடும் தூரமே....

முயன்றுவிடு முழுவதும்......

மலைகள் குறுக்கிட்டால்

முட்டி மோதி விடு...



நெருப்பினால்

சுட்டெரிக்கப்படாமல்

அணிகலண் ஏது....?

கொல்லன் கையில்

அடிபடாத

மகுடம் ஏது...?



செய்து விடு....

செத்து விடாதே......

முடித்து விடு....

மடிந்து விடாதே....



ஏனென்றால்

என் கேள்விக்கு பதில் கூறு.....

உனக்கு நிகர் யாருண்டு..?