வெள்ளி, செப்டம்பர் 09, 2011

நவீன தொழில்நுட்பம் - இன்று ஒரு தகவல்

பெருகி வரும் வாகனங்களும் அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் நாம் எல்லாரும் அறிந்த விசயம்தான்.  அதிக வாகனங்கள் இயக்கப்படுவதால் ஏற்படும் எரிபொருள் இழப்பு மிகவும் ஈடுகட்ட முடியாத ஓன்று.  இயற்கை வளமான எரிபொருட்கள் குறைந்து கொண்டே வருவதால் அதற்கும் முடிவு காணவேண்டிய நிலையில் இந்த உலகம் உள்ளது.
 
இவைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் உலகமெல்லாம் ஈடுபட்டிருக்க ,  சீனாவை சேர்ந்த  யூசா சாங்  என்பவர் ஒரு புதிய நவீன வடிவமைப்பை கண்டுபிடித்துள்ளார்.  இந்த நவீன தொழில் நுட்பம் செயல்பட ஆரம்பித்துவிட்டால்  சீனாவின் போக்குவரத்து நெரிசலும் சுற்றுப்புற சீர்கேட்டை கொண்டுவரும் புகையும்  ( வாகனங்களால் வெளியிடபடுபவை )  கணிசமாக குறைந்துவிட வாய்ப்புகள் உள்ளது. 
 

இதுதான் அந்த நவீன தொழில் நுட்பம் .  Straddling  Bus  என்று அழைக்கபடுகிறது.  18  அடி உயரமும் 25  அடி அகலமுமான ஒரு பேருந்து.     பிரத்தியேகமாக  வடிவமைக்கப்பட்ட  ஓடுபாதை பயன்படுத்தப்பட போகிறது.     இந்த பேருந்தின் மேல்தட்டில் மாத்திரம் பயணிகள் இருப்பார்கள்.   மேல்தட்டிற்கு கீழ் இருக்கும் சாலையில் மற்ற சிறு வாகனங்கள் சென்று வரும்.  படத்தை கூர்ந்து பாருங்கள்.  பேருந்தின் சக்கரங்கள் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்றும் எப்படி அதன் கீழ் வாகனங்கள் சென்று வருகிறது என்பதையும்.  இதனால் இந்த பேருந்தின் நிமித்தம் எந்த போக்குவரத்து இடைஞ்சலும் இருக்காது.  சுமார் 1200  பேர் இதில் பயணிக்கும் சக்தி இருப்பதால் மற்ற பேருந்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.  சுமார் 40 கிமீ  வேகத்தில் செல்லும் இந்த பேருந்து 25  முதல் 30  சதவீத நெரிசலை குறைக்கும் என எதிர்பார்க்க படுகிறது.
 
 

இந்த பேருந்தை இயக்குவதற்க்கான சக்தி முழுவதும் பேருந்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும் சூரிய ஒளி தகடுகள் மூலம் பெறப்படும்.  பேருந்து நிறுத்தத்தின் கூரையிலும் சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்பட்டு அந்த சக்தியும் பேருந்துக்கு மாற்றப்படும்.   இந்த பேருந்தின் மூலம் சுமார் 40  சாதாரண பேருந்துகளை ஈடுகட்ட முடியும்.  எனவே வருடத்திற்கு சுமார் 860000 கிலோ எரிபொருள் சேமிக்கப்படும் என்றும் சுமார் 2640000  கிலோ கார்பன் நச்சு பொருட்களை கட்டுப்படுத்த முடியும் என்று எதிர்பர்க்கப்படுகிறது.   ( நன்றி : நியூயார்க் டைம்ஸ் ) 

ரொம்ப அற்புதமான வடிவமைப்பு என்பதில் சந்தேகம் இல்லை.  சாங் அவர்களுக்கு ஒரு "ஒ" போட்டு விட்டு , நமது சாலைகளிலும் இந்த தொழில்நுட்பம் வரும் நாளை நாம் எதிர்பார்ப்போம்.

 

வியாழன், செப்டம்பர் 08, 2011

தீவீரவாதியே...... நீ ஒரு கோழை .... !


வைகறை பொழுதில் ...
மனங்கவர்ந்த வேளையில்....
எதிர்பாரா தருணத்தில்....
நாசகாரனாய் உருவெடுத்து....
குண்டுகளை வெடித்து ...
குருதியை சிந்த செய்து ...
கொடும்பாவம் செய்தவனே ...
தீவீரவாதியே...
நீ ஒரு வீரனா....?


நீ வீரனாயிருந்தால் ....

அஞ்சா நெஞ்சமும் ...
தூங்கா கண்களும் ....
தினவெடுத்த தோள்களும் ....
பனி படர்ந்த மலையிலும்
தளராத கால்களும் ....
துச்சமென உயிரை மதித்து
தாய் நாட்டை காக்கும்
எம் வீரனிடம்
நேரில் காண்பி
உன் வீரத்தை .....


முடியவில்லையா ....?

வேற்றுமையில் ஒற்றுமை
என்னும் தாரக மந்திரம் கைக்கொண்டு ..
வஞ்சனையில்லா நெஞ்சமுள்ள
உண்மை குடிமகன்
முன்பாவது
நேரில் காண்பி
உன் வீரத்தை ....

அதுவும் முடியவில்லையா ...?


தேசப்பற்றே குருதியாய்
ஓடும் எம் தாய்திருநாட்டின்
மகளிர் .....!
பாதகமறியாத எம்
பச்சிளம் குழந்தைகள் ...
யாரிடமாவது
நேரில் காண்பி
உன் வீரத்தை .....


எப்படி முடியும் உன்னால்
நீதான் கோழை ஆயிற்றே ....!


குண்டுகள் வெடித்தாலும்
எம் நெஞ்சுரம் வெடிக்காது ....
சடலங்கள் சிதறினாலும்
"வந்தே மாதரம்" சப்தம் சிதறாது ....!


எம்மை தோற்கடிக்க
நினைத்து தோற்றாயே ....!
தீவீரவாதியே......
 நீ ஒரு கோழை .... !

புதன், செப்டம்பர் 07, 2011

நிலம் வாங்கலியோ நிலம் - ஒரு பகீர் ஏலம் .....

கையை கட்டி,  வாயை கட்டி 24  மணி நேரமும் வேலை பார்த்து, குருவி சேர்ப்பது போல சேர்த்து நிலம் வாங்க போனால் , அம்மாடியோவ் ஆளை விட்டால் போதும்...  ஒரு சென்ட் நிலம் வாங்க கூட பணம் இல்லை என புலம்பும் சொந்தங்கள் அநேகம் பேர் உண்டு. 
 
அப்படியே கஷ்டப்பட்டு வாங்கிட்டாலும் , அதை மத்தவங்க  கையிலிருந்து  காப்பற்றுவதர்க்குள்  தலையில் உள்ள முடியெல்லாம் கொட்டி  ஏன்டா இந்த நிலத்தை வாங்கினோம் என்று  கதறும் உறவுகளும் அநேகர் உண்டு..
 
உங்கள் எல்லாருக்கும் ஒரு ஆச்சரியமூட்டும் சந்தோஷ செய்தியை சொல்லுகிறேன்.   காதை நல்ல கூர் தீட்டி கொள்ளுங்கள்.  குறைந்த விலையில் ஏக்கர் கணக்கில் நிலம் கிடைக்கிறது என்றால் நம்புவீர்களா? .  அதுவும்  1  ஏக்கர் வெறும் 1500  ரூபாயில் என்றால்.  இப்போதே அநேகர் என்னை திட்டுவது எனக்கு கேட்கிறது.  ஆனால் உண்மை.  நம்புங்கள் ....  1  ஏக்கர் மற்றும் 10  ஏக்கர்களாக பிரித்து கொடுக்கப்படுகிறது.
 
ஆனால் , ஒரு சின்ன விஷயம் , நிலம் மட்டும் நம்ம பூமியில் இல்லை , பூமிக்கு பக்கத்தில இருக்கிற சந்திரன் , புதன் மற்றும் செவ்வாய் கோள்களில் இருக்கு.  உடனடி பத்திரபதிவு  முந்துங்கள் ....




எவன் வீட்டு நிலத்தை எவன் விக்கிறது அப்படின்னு கேட்டிங்கன்னா தயவு செய்து என்னிடம் கேட்காமல் MOONESTATES .COM  யை கிளிக் பண்ணி அவனை கேளுங்க ....
 
 
என்னவோ சொல்ல வாறீங்க ..... டப்புன்னு சொல்லிடுங்க ......

செவ்வாய், செப்டம்பர் 06, 2011

பலே தாத்தா பலே .....சுவாரசிய தகவல்


இந்திய வம்சாவளியை சேர்ந்த மாரத்தான் ஓட்ட பந்தய வீரர் தான் இவர்.   பெயர் பாஜா சிங்.  உலக சாதனை ஒன்றுக்கும் சொந்தகாரர்.  அப்படி என்ன பெரிதாக சாதித்து விட்டார் என்கிறீர்களா?  ஒன்றுமில்லை .... தன்னுடைய 92 வது வயதில் சும்மா வீட்டில் இருக்காமல் ஒரு மாரத்தான் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்டார்.  2003 ம் வருடத்தில் கனடா டொராண்டோவில் நடைபெற்ற பந்தயத்தில் பந்தய தூரத்தை சுமார் 5 மணி 40 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார்.  இப்பொழுது 100  வயதாகியிருக்கும் இவர் தன்னுடைய ஓட்ட பந்தய ஆசையை விட்ட பாடில்லை.  கடவுளுக்கு சித்தமிருந்தால் தான் சாகும் வரை ஓட ஆயத்தமாயிருக்கிறேன் என்கிறார் இந்த 100  வயது பலே தாத்தா.  ( நன்றி  : ப்ரோ ஸ்போர்ட்ஸ் )


இதெல்லாம் அழகாக படித்து முடித்த நண்பர்களே , நீங்கள் விடுகிற பெருமூச்சு இங்கே வரை கேட்கிறது. என்ன பண்ணுவது?  காலையிலே சீக்கிரமா எழும்பி கொஞ்சம் ஓடி பாருங்க 

திங்கள், செப்டம்பர் 05, 2011

ராட்சத மனிதர்கள் - ஒரு பகீர் ரிப்போர்ட்

சௌதி அரேபியாவின் தென் கிழக்கு பகுதியில் அகழ்வாராட்சி செய்தபோது அதிசயிக்கும் விதமாக கண்டுபிடிக்கப்பட்ட ராட்சதர்களின் சில உருவங்களை காணுங்கள்....
 

 



பரிசுத்த வேதத்தில், தாவீது என்னபடுகிற ராஜா , கோலியாத்து என்னப்படுகிற ராட்சதனை கொன்றார் என பார்க்கமுடிகிறது ( I  சாமுவேல் 17 ம் அதி ) 
 

மேலும் பல ராட்சதர்களை குறித்து II சாமுவேல் 21 ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
 
 

 
நமக்கெல்லாம் கரப்பான் பூச்சியை பார்த்தாலே கொஞ்சம் பயம் .... அம்மாடியோவ் ....... மயக்கம் போட்டால் நான் பொறுப்பல்ல
 

 

ஞாயிறு, செப்டம்பர் 04, 2011

பல் வலியா.... உயிருக்கு கூட ஆபத்து வரலாம் - ஒரு ரிப்போர்ட்

பல் வலி வந்தது என்றால் நம் வீடுகளில் பொதுவாக பெரிய அளவில் சிரத்தை எடுத்து கொள்ளமாட்டார்கள். கொஞ்சம் காயம் அல்லது வெள்ளை பூண்டு இவைகளை பயன்படுத்துகிறவர்கள் அநேகர். ஆனால் பல் வலிக்கும் சரியான சிகிச்சை எடுத்து கொள்ளாவிடில் உயிருக்கே ஆபத்து என்பது நம்புவதற்கு கொஞ்சம் கடினம் தானே.
 
அமெரிக்காவில் சின்சினாட்டி எனப்படுகிற இடத்தில 24  வயது வாலிபன் ஒருவர் பல் வலிக்கு பலியானார் என்பது ஒரு அதிர்ச்சியான தகவல். கடுமையான பல் வலியினால் அவதிபட்ட அவர் பல்மருத்துவரை சந்தித்தார். நோயின் தீவீரத்தை அறிந்த மருத்துவர் உடனடியாக பல்லை பிடுங்கவேண்டும் என்று ஆலோசனை கொடுத்தார். ஆனால் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால் பல்லை பிடுங்க வாலிபர் மறுத்துவிட்டார். சில நாட்களில் வலியினால் முகம் வீக்கமடைந்தது. உடனடியாக அவசர பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் போதிய சிகிச்சை அளித்தும், பல்லில் ஏற்பட்ட நோய்க்கிருமியின் பாதிப்புகள் மூளையை பாதித்தபடியால் வாலிபர் மரித்துபோனார்.
( நன்றி :  நியூஸ் டெஸ்க் 03   09   2011  )
 
பல் வியாதிகள் எளிதில் குணமாக்க முடியும் என்றாலும், காலம் கழிந்தால் உயிருக்கு கூட ஆபத்துதான் .
 
என்ன ...? இப்பவே பல் டாக்டரை பார்க்க கிளம்பிட்டிங்களா?