திங்கள், நவம்பர் 07, 2011

LPG பயன்படுத்துபவரா நீங்கள்? - கொஞ்சம் கவனியுங்கள்


விறகு வைத்து சமையல் செய்த காலம் மாறி போய் இப்போதெல்லாம் எங்கும் காஸ் ஸ்டவ் தான் .   அதாவது LPG என்று சொல்லப்படுகிற நீர்ம பெட்ரோலிய வாயு ( லிஃஉஎபிஎட் Petroleum Gas )  தான் நமது வீட்டின் சமையல் அறைகளில் பயன்படுத்தபடுகிறது .   அப்படி LPG நாம் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய சில காரியங்களை நாம் பார்க்கலாம் .



LPG சிலின்டர் நமது வீட்டிற்கு வரும்பொழுதே  ,  அந்த சிலிண்டரின் ஆயுள் காலத்தை கவனித்த பின்பு தான் வாங்க வேண்டும் .  சிலிண்டருக்கு ஆயுள் காலம் உண்டா என்றால் உண்டு .   கீழ் உள்ள படத்தை பாருங்கள் .



LPG சிலின்டர் நமது வீட்டிற்கு வரும்பொழுதே  ,  அந்த சிலிண்டரின் ஆயுள் காலத்தை கவனித்த பின்பு தான் வாங்க வேண்டும் .  சிலிண்டருக்கு ஆயுள் காலம் உண்டா என்றால் உண்டு .   கீழ் உள்ள படத்தை பாருங்கள் .

சிலிண்டரின் ஆயுள் காலம் அந்த சிலிண்டருக்கு மேல் குறிப்பிடபடி  எழுதப்பட்டிருக்கும் .  இதில் 4  ஆங்கில எழுத்துகள் ( A , B , C , D ) என்று வரும் .  இந்த நான்கு எழுத்துகளும் முதல் காலாண்டு ( மார்ச் வரை )  ,  இரண்டாம்  காலாண்டு ( ஜூன் வரை ) , மூன்றாம் காலாண்டு ( செப்டம்பர் வரை ) ,  நான்காம் காலாண்டு ( டிசம்பர் வரை ) என்று பொருள்படும் .  தொடர்ந்து எழுதபட்டிருக்கும் இரண்டு எண்களும் வருடத்தை குறிக்கும் .

மேற்கண்ட படத்தின் படி ,  இந்த சிலிண்டர் டிசம்பர் 2013 வரை பயன்படுத்தமுடியும் .

பொதுவாக LPG வாயுவுக்கு மணம் கிடையாது .  ஆனால் ஏதும் கசிவு ஏற்பட்டுளதா என்பதை கண்டுகொள்ள தான் அதனுடன் மணம் உண்டுபண்ணும் காரணிகள் சேர்க்கப்பட்டுள்ளது .  அதனால் ஏதேனும் LPG மணம் ஏற்பட்டால் உடனடியாக எந்த மின்சார இணைப்புகளும் கொடுக்க கூடாது .  ஏன் எனில் அதன் மூலம் எளிதில் தீ பிடிக்க வாய்ப்புண்டு .

பொதுவாக LPG ,  சாதாரண காற்றை விட அடர்த்தியாக உள்ள காரணத்தினால்  , ஏதேனும் கசிவு ஏற்பட்டால் தரையை ஒட்டி தான் பரவி காணப்படும் .   அதனால் தரை பகுதியில் நல்ல காற்றோட்டம் உருவாகும் படி எல்லா கதவுகளையும் ( கசிவு ஏற்பட்டால் )  திறந்து வைப்பது நல்லது .


சிலிண்டர்கள் எப்பொழுதும் நேராக ( vertically ) தான் வைக்க வேண்டும் .  படுக்க ( Horizontally ) வைக்க கூடாது .  அதிக அழுத்தத்தில் LPG உள் நிரப்பப்பட்டிருப்பதால் சிலிண்டரின் வால்வில் ஏதாவது பாதிப்பு ஏற்ப்பட்டால் சிலிண்டர் வெகு வேகமாக பின் நோக்கி ( Like Rocket ) தள்ளப்படும் .  அதனால் ஏற்ப்படும் விளைவு மிக மோசமானது .

டிஸ்கி :  பாதுகாப்போடு சமையல் செய்யுங்கள் .   நீங்கள் சுகமாய் இருந்தால் தான் சமையல் சுவைக்கும் .


Related post



12 கருத்துகள்:

  1. பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. சிலிண்டரின் ஆயுள் பற்றி அறிந்துகொண்டேன்.. நல்ல பகிர்வுங்க...

    பதிலளிநீக்கு
  3. @ ராஜ ராஜேஸ்வரி : தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  4. @ பாலாசி : தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  5. இந்த தகவலை பகிர்ந்ததற்கு நன்றி. இதை ஏன் பொது மக்களுக்கு இந்த எண்ணெய் நிறுவனங்கள் சொல்ல மறந்துவிட்டன? சுயநலமோ?

    பதிலளிநீக்கு
  6. கார்களில் சில சமயம் சிலிண்டரை படுக்க வைத்திருக்கிறார்களே, அதனால் ஆபத்து உண்டா?

    பதிலளிநீக்கு
  7. @ sandspace : தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே .... இதை குறித்து ஒரு விரிவான விளக்கம் பொது மக்களுக்கு கொடுத்தால் நல்லது தான் .

    பதிலளிநீக்கு
  8. @ DrPKandaswamy Phd : ஐயா , தங்கள் வருகைக்கு மிக்க நன்றி . நீங்கள் சொன்ன படி கார்களில் சிலிண்டரை படுக்க வைப்பது கூட ஆபத்தானது தான் . அதனால் தான் தற்பொழுது கார்களில் கார் கம்பெனி விசேச சிலிண்டர் பொருத்தி தருகிறார்கள் .

    பதிலளிநீக்கு
  9. @ துரை டேனியல் :
    @ லோகநாதன் கோபிநாத் :
    @ கே.C . சிவராஜ் :

    தங்கள் கனிவான வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி நண்பர்களே ..

    பதிலளிநீக்கு