புதன், செப்டம்பர் 21, 2011

அதிவேக இன்டர்நெட் பதிவிறக்கம் - ஒரு தகவல்


இணையத்தை பயன்படுத்தும் அநேகர் சொல்லும் காரியம் என்னவென்றால் " என்னய்யா இது வேகமே இல்லஅதுவும் சில வேளைகளில் பதிவிறக்கம் செய்தால் சொல்லவே வேண்டாம் .....  பக்கத்து ஊருக்கு கூட போய் விட்டு வந்து விடலாம் ..

பண்டோ நெட்வொர்க் உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இணையத்தின் பதிவிறக்க வேகத்தை குறித்து செய்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்துள்ளன.   அதில் உலகிலேயே அதி வேக பதிவிறக்கம் கொண்ட இணையத்தை தென் கொரியா வைத்திருப்பதாக தெரிய வந்துள்ளதுசில தகவல்களை பாருங்களேன் ..

தென் கொரியா
2202
Kbps

ருமானியா 
1909
Kbps
பல்கேரியா
1611
Kbps
லிதோனியா
1462
Kbps
லாட்வியா
1377
Kbps
ஜப்பான்
1364
Kbps
ஸ்வீடன்
1234
Kbps
உக்ரைன்
1190
Kbps
டென்மார்க்
1020
Kbps
ஹாங்காங்
992
Kbps
அமெரிக்கா
606
Kbps
பிரான்ஸ்
604
Kbps
பிரிட்டன்
599
Kbps
கனடா
579
Kbps
சீனா
245
Kbps
காங்கோ
13
Kbps


இந்த ஆய்விற்காக 224  நாடுகளில் உள்ள 20 மில்லியன் கணிப்பொறிகளின் 27  மில்லியன் பதிவிறக்கங்கள் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏன்யா ...  நமக்கு எப்படி ....?  அப்படின்னு யாரோ கேக்கிற மாதிரி இருக்கு ...  அப்படியே ஒரு தடவை  http://chartsbin.com/view/2484  போய் பார்த்து விட்டு வரலாமே

செவ்வாய், செப்டம்பர் 20, 2011

சாக்கடை காதலனின் சங்கீத வாழ்த்துகள்


ஊழல் என்னும்
வீதியிலே
உலா வரும்
ஊமைப் பெண்ணே ....!
நான் தான் - நின்
காதலன் ...!
அரசியல் என்பது
அடியேனின் திரு நாமம் ....!

அப்பாவி என்பவன்
எனக்கு அடிமை ...!
அடப் பாவி ..! என்பவன்
எனக்கு பகைமை ....!

கொடி என்பது
எனது உயிர் ...!
கோடி என்பது
ஒரு நாள் சம்பாத்தியம் ...!

பணம் என்பது என் வீட்டு
மாட்டுக்கும் பஞ்சு மெத்தை...!
மனம் என்பது
என்னவென்றே தெரியாது ...!
தினம் சொல்வது
பல பொய்கள் ....!
கனம் என்பது தலையில் மட்டும்
மக்களிடம் அல்ல ...!

பிறரை குறை சொல்லி
பிழைக்கும்
கோமாளிகள் நாங்கள் ....
எங்களை நம்பி
ஏமாறும்
ஏமாளிகள் மக்கள் ....!

இனியும் நம் உறவு
நாள் தோறும்
இனிக்க
இந்த
சாக்கடை காதலனின்
சங்கீத வாழ்த்துகள் ....!


( நேர்மையான அரசியல்வாதிகளுக்கு இந்த கவிதை பொருந்தாது .   எழுத தோன்றியது .. எழுதி விட்டேன் )