சனி, அக்டோபர் 08, 2011

வானத்தில் பறக்கும் காற்றாலை - ஒரு அதிசய தகவல்

பூமியில் காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பது நாம் அனைவரும் அறிந்த தகவல்.   அதிகப்படியான காற்றாலைகள் அமைக்க போதிய வசதி நிலப்பரப்பில் இல்லையெனில் என்ன செய்ய என்று யோசித்ததின் விளைவு இந்த வானத்தில் பறக்கும் காற்றாலை.  

Sleek  20 KW  Wing  7  prototype என பெயரிடப்பட்டுள்ள இந்த காற்றாலை விமானத்தை போல காற்றில் பறக்கும் சக்தி கொண்டது.    காற்று எங்கே வேகமாகவும் தொடர்ச்சியாகவும் உள்ளதோ அந்த இடத்திற்கு இது கடந்து செல்லும்.  எனவே இந்த படைப்பு சாதாரண காற்றாலைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.  

கிட்டத்தட்ட 1500  அடி உயரம் வரை பறக்கும் சக்தி கொண்ட இந்த பறக்கும் காற்றாலை நம்ம ஊர் பட்டம் போல பெரிய கயிறு / தாம்பு கொண்டு தரையில் இணைக்கப்பட்டிருக்கும்.   8  மீட்டர் நீளமுடைய இறக்கைகளை கொண்ட இந்த பறக்கும் காற்றாலை 56  கிலோ எடை கொண்டது.   மணிக்கு 22  மைல் வேகத்தில் வீசும் காற்றில் இருந்து 20 KW  மின்சாரம் உருவாகும் சக்தி கொண்ட இந்த காற்றாலை உருவாக்கப்பட்ட மின்சாரத்தை இணைக்கப்பட்டுள்ள இணைப்பின் வழியே பூமிக்கு மின்சாரத்தை அனுப்பும் திறம் படைத்தது



இந்த கண்டுபிடிப்பு POPULAR MECHANICS ன் 7 வது ஆண்டு விருதை பெற்றுள்ளது.  அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த Makani power  என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

டிஸ்கி :  பறவைகளினால் இந்த பறக்கும் காற்றாலைக்கு ஆபத்து வருமா என்ற கேள்விக்கும் இதே போல் இரண்டு அல்லது மூன்று காற்றாலைகள் செயல்படும் போது ஒன்றுடன் ஓன்று சிக்கி கொள்ளாதா என்ற கேள்விக்கும் இது வரை சரியான பதில் கிடைக்கவில்லை.  இருந்தாலும் இது கண்டுபிடிப்பின் ஆரம்பம் தானே ... சரி செய்யப்படும் என்று எதிர்பார்ப்போம்.

வெள்ளி, அக்டோபர் 07, 2011

உலகின் உயரமான இடத்தில வெப் கேமரா - ஒரு சாதனை தகவல்


வெப் கேமரா என்றவுடன் நமது கணிப்பொறிக்கு முன்பு நாம் வைத்திருக்கும் சிறிய கேமரா தான் நியாபகத்திற்கு வரும்.  அப்படி ஒரு வெப் காமெராவை உலகின் உயரமான இடத்தில பொருத்தி உள்ளார்கள் என்பது வியப்பு தானே.  அதுவும் உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை படம் பிடிக்க அப்படி செய்திருப்பது சாதனை தானே.  
 
 
 
எவரெஸ்ட் சிகரத்தின் எதிர்புறமான kala patthar  என்ற மலையின் மேல் இந்த கேமரா நிறுவப்பட்டுள்ளது.   கிட்டத்தட்ட 5675  மீட்டர்  ( 18618  அடி )  உயரத்தில் 8848  மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தை படம் பிடிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது.   மைனஸ் 30  டிகிரி குளிரிலும் வேலை செய்யும் வேகம் கொண்ட இந்த கேமரா இரவு பகல் இரு வேலைகளிலும் உழைக்கும் என்று கூறப்படுகிறது.  இந்த கேமரா இயங்குவதற்கு தேவையான சக்தி சூரிய ஒளியில் இருந்து பெறும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
 
 
 EV -K2 -CNR  என்ற மலைகளை குறித்து ஆராயும் நிறுவனம் பொருத்தியுள்ள இந்த கேமரா ஜெர்மனி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.   நேபாள நேரத்தின் படி காலை 6  மணியில் இருந்து மாலை 6  மணி வரைக்கும் எவரெஸ்ட் சிகரத்தை படம் பிடிக்கும் இந்த கேமரா 5  நிமிடங்களுக்கு ஒரு முறை எடுத்த படங்களை அனுப்பும் சக்தி உடையது.   இந்த கேமரா கொடுக்கும் படங்கள் உலக வெப்பமயமாதலின் நிமித்தம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிய முடியும் என்று நம்பிக்கையுடன் சொல்லுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
 
டிஸ்கி :   உலக வெப்பமயமாதல் நாம் வெளியிடுகிற நச்சு வாயுக்களான CO2  , SO2  ளினால் உண்டாகிறது.   பக்கத்தில் இருக்கும் கடைக்கு போக கூட பைக்கை எடுப்பதை விட்டு விட்டு கொஞ்சம் நடந்து போய் தான் பார்ப்போமே.   கொஞ்சம் நச்சு புகை குறையும்.  நாம வேறென்ன தான் செய்ய...?
 
 

வியாழன், அக்டோபர் 06, 2011

100 கோடி பதிவிறக்கங்களை தாண்டியது - கூகிள் எர்த் - ஒரு ரிப்போர்ட்

கூகிள் எர்த் இணையத்தை பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது எனலாம்.  வீட்டில் இருந்த படியே உலகம் முழுவதும் காணக்கூடிய அளவில் செயற்கை கோள் புகைப்படங்களை வைத்து உருவாக்கப் பட்ட அற்புதமான இணையம். 

2005  வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இணைய சேவை சென்ற புதன் கிழமையன்று ( 05 . 10 . 2011  ) அன்று 1 பில்லியன் ,  அதாவது  100  கோடி பதிவிறக்கம் என்ற சாதனையை தொட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  
2006 ம் வருடத்தில் முப்பரிமாண தொழில்நுட்பம் கூகிள் எர்த்ல் அறிமுகப்படுத்தப்பட்டது.   தொடர்ந்து 2009 ம் ஆண்டில் கடல் பரப்பிலும் ,  கடலுக்கு உள்ளும் உள்ள சில இடங்களை காணும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

"இந்த பெரிய சாதனை எங்களுக்கு பெருமையை அளித்தாலும் ,  இன்னும் எங்களால் நம்பமுடியவில்லை" என்கிறார் கூகிள் எர்த் ன் தொழில்நுட்ப உதவி தலைவர் திரு.  Brian McClendon .

குறிப்பு :  ஆஸ்திரேலியா வில் உள்ள தொல்பொருள் ஆராச்சியாளர் ஒருவர் கூகிள் எர்த் உதவி கொண்டு சௌதி அரேபியாவில் தொல்பொருள் ஆராய்ச்சி செய்தாராம். 

நன்றி :  கூகிள் நியூஸ்
 

புதன், அக்டோபர் 05, 2011

உலகின் மிக நீண்ட பாலம் - அற்புதமான தொழில்நுட்பம்


உலகின் மிக நீண்ட பாலம் சீனாவில் உள்ளது.   அதனுடைய நீளம் 26 . 4  மைல் என்பது பெரும் வியப்பு.  110  அடி அகலமானது இந்த பாலம். அது கடலின் மேல் கட்டப்பட்டுள்ளது என்பது அதைவிட பெரும் வியப்பு.  சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள கிங்க்டாவ் நகரத்தையும் ஹோங்க்டாவ் என்ற தீவையும் இந்த பாலம் இணைக்கிறது. 
 
 
5000  தூண்கள் தாங்கி நிற்கும் இந்த அதி நவீன பாலம்  £960  மில்லியன் செலவில் கட்டப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.   கடலுக்குள்ளே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது இந்த பாலத்தின் மேல் தான் 
 
 
 
ஒரே சமயத்தில் இரண்டு பக்கங்களில் இருந்தும் இரண்டு வெவ்வேறு குழுக்களால் இந்த பால வேலை 2006 ல் ஆரம்பிக்கப்பட்டது.  சரியாக நடுக்கடலில் இந்த பாலம் இணைக்கப்பட்டது வியப்பு தானே.  லண்டனில் உள்ள TOWER பாலத்தை விட 174  மடங்கு இது நீளமானது. 
 
 
 
சிறப்பு தகவல் :  இந்த மிக நீண்ட பாலத்தின் சாதனை வெகு விரைவில் முறியடிக்கபட போகிறது.  அதாவது 30 மைல் நீளத்தில் கிட்டத்தட்ட £6.5 பில்லியன் செலவில் இன்னொரு பாலத்தின் வேலை தொடங்கப்பட்டு உள்ளது.  2016 ல் கட்டிமுடிக்கப்படும் என எதிர்பார்க்க படுகிறது.  அதுவும் சீனாவில் தான்.
 
ஆனால் அந்த சாதனையையும் முறியடிக்க அடுத்த திட்டம் உருவாகியுள்ளது.  102  மைல் நீளத்தில் ஒரு பாலம் அமைத்து danyang  மற்றும் kunshan  பகுதிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.   அதுவும் சீனாவில் என்பது வியப்புக்குரியது தான்.   ( நன்றி :  மெயில் ஆன் லைன்)
 

செவ்வாய், அக்டோபர் 04, 2011

இலக்கங்கள் தமிழில் - ஒரு சிறப்பு பார்வை




உலகிலயே மிக பழமையானதும்,   மிக இனிமையானதும் , மிக வலிமையானதுமான தமிழின் பெருமைகளை வியக்காதவர் யாரும் இருக்க முடியாது என்பது திண்ணம்.   எண்கள் இலக்கங்கள் ஆகும் போது , ஆங்கிலத்தால் விளக்கமுடியாத இலக்கங்களுக்கு தமிழ் விடை கூறுவதை பார்த்தால் என்ன வியப்பு...! .   சில இலக்கங்களை நாம் கீழே காணலாமே ..

இலக்கம் 
தமிழில்
ஆங்கிலத்தில்
1
ஓன்று
One
10
பத்து
Ten
100
நூறு
Hundred
1000
ஆயிரம்
Thousand
10000
பத்தாயிரம்
Ten Thousand
100000
நூறாயிரம்
Hundred Thousand
1000000
 பத்து  நூறாயிரம்
One Million
10000000
கோடி  
Ten Million
100000000
 அற்புதம்
Hundred Million
1000000000
நிகற்புதம்
One Billion
10000000000
கும்பம்
Ten Billion
100000000000
கணம்
Hundred Billion
1000000000000
கற்பம்
One Trillion
10000000000000
நிகற்பம்
Ten Trillion
100000000000000
பதுமம்
Hundred Trillion
1000000000000000
சங்கம்
One Zillion
10000000000000000
வெள்ளம்
Ten Zillion
100000000000000000
அன்னியம்
Hundred Zillion
1000000000000000000
அர்த்தம்
??????
10000000000000000000
பரர்ட்டம்
???????
100000000000000000000
 பூரியம் 
????????
1000000000000000000000
முக்கோடி
?????????
10000000000000000000000
மகாயுகம் 
?/?????????



என்ன தோன்றுகிறது உங்களுக்கு ...... தமிழுக்கு நிகர் தமிழே ..!

 " உன் சீரிளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே ,  வாழ்த்துதுமே , வாழ்த்துதுமே ...! 


நன்றி திரு. ஆனந்த் கிருஷ்ணன்  ,  திரு சந்தீப் வர்மா ,                               திரு மோசஸ்





திங்கள், அக்டோபர் 03, 2011

கண்ணுக்கு புலப்படாத சாவி - இன்று ஒரு தகவல்


தைவானை சேர்ந்த ஆராச்சியாளர்கள் சிலர் சேர்ந்து கண்ணுக்கு புலப்படாத சாவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.   அதாவது கதவை திறப்பதற்கு நாம் பயன்படுத்தும் சாவி இல்லாமல் வெறும் கையின் சைகைகளை கொண்டு கதவை திறப்பத்ர்க்கான புதிய முயற்சி தான் இது.



இந்த நவீன தொழில்நுட்பத்தின் மூலமாக ஒரு சிப் செயல்படுகிறதுஇந்த சிப் 3 பரிமாணங்களில் அசைவுகளை கண்டறியும் சக்தி படைத்தது.   இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பயனாளிகள் தங்கள் கையின் சைகைகளை ஏற்கெனவே இதில் பதிந்து வைத்திருக்க வேண்டும்அதனால் எப்பொழுதெல்லாம் சைகைகள் கான்பிக்கப்படுகிறதோ அப்பொழுது எல்லாம் சாவி இல்லாமலே கதவுகளை திறக்க இயலும்

இந்த கண்ணுக்கு புலப்படாத சாவி தொழில்நுட்பத்திற்கு ஆதரவு பெருகி வரும் நிலையில்அநேக பிரபல நிறுவனங்கள் தங்களை அணுகுவதால் இன்னும்மாதத்திற்குள் இந்த கண்டுபிடிப்பை சந்தைக்கு கொண்டுவர திட்டமிட்டிருப்பதாக தெரிவிகின்றனர் இந்த குழுவினர்.

தைபேயில் நடைபெற்ற சர்வதேச கண்டுபிடிப்புகள் கண்காட்சியில் இந்த கண்டுபிடிப்பிற்கு தங்க பதக்கம் கிடைத்துள்ளது கூடுதல் செய்தி.    வருங்காலத்தில் நீங்கள் சாவிகளை தொலைப்பது குறித்து கவலைப்பட வேண்டாம் என்கிறார் இந்த குழுவின் தலைவரான Tsai Yao Pin .


டிஸ்கி அது சரி ... சாவியை தொலைக்கிற நாங்கள் சைகைகளை மறந்து விட்டால் என்ன செய்வது என யாரோ கேட்பது தெரிகிறதுபதிலை நான் சொல்வது முறை அல்ல என்றாலும் நானே சொல்கிறேன் ... வேறென்ன வெளியில் இருக்க வேண்டியது தான்பிறகு கம்பெனியில் இருந்து வந்து சரி செய்து ஒரு நல்ல அமௌன்ட் சர்வீஸ் சார்ஜ் போடுவார்கள்.