வெள்ளி, செப்டம்பர் 30, 2011

அதி நவீன கேமரா - ஒரு ரிப்போர்ட்



போக்குவரத்தை கவனிப்பதற்காக   ஐரோப்பிய கழகம் அதி நவீன , அதி வேக கேமரா ஒன்றை உருவாக முனைந்துள்ளது.   Advanced Safety and Driver Support for Essential Road Transport (Asset) கேமரா என்று அழைக்கப்படும் இந்த கேமராவிதமான பணிகளை செய்யும் என எதிர் பார்க்கபடுகிறது.


  1. வாகனங்களின் வேகத்தை கணக்கிட உதவுகிறது.
  2. வாகன ஓட்டுனர்கள் தங்களது பாதுகாப்பு பெல்டை அணிந்திருகிறார்களா என கண்டறிந்து தகவல் கொடுக்கும்.
  3. இரு வாகனங்களுக்கு இடைப்பட்ட தூரத்தை கணக்கிட்டுவிபத்தை குறைக்க தகவல் கொடுக்கும்.
  4. வாகனங்களின் நம்பர் பதிவெடுத்துவாகனத்தின் வரி மற்றும் இன்சூரன்ஸ் காலங்களை ஆய்வு செய்து தகவல் கொடுக்கும்.   இதற்காக GPS  தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
  5. ஒரு மாதத்திற்குரிய பதிவுகள் அழிக்காமல் பாதுகாக்கப்பட்டு மைய கணினியில் சேகரித்து வைக்கப்படும்.

தற்பொழுது சோதனை முயற்சியில் இந்த கேமரா பின்லாந்தில் உள்ள VTT  டெக்னிகல் ரிசெர்ச் சென்டர் ல் வைத்து நடைபெறுகிறதுஇன்னும் மூன்று வருடங்களில் இந்த கேமரா முழுமையான பயன்பாட்டிற்கு கடந்து வரும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.  

 இந்த காமெராவை ஐரோப்பாவிலுள்ள பல்கலை மாணவர்கள்  பலர் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.   இதனுடைய விலை கிட்டத்தட்ட 50000  ஸ்டெர்லிங் பவுண்ட் (GBP ) இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.   இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 3750000  மட்டும்

டிஸ்கி :  நாங்க தான் லைசென்சே இல்லாமல் வண்டியை ஒட்டுவோமே ...  அதை இது கண்டு பிடிக்குமா ...?  என்று மாத்திரம் என்னிடம் கேட்காதீர்கள் ...   அது கூட பிற்காலத்தில் செய்யலாம்.




                                                                                      

புதன், செப்டம்பர் 28, 2011

நானோ காரின் விலை 22 கோடி - ஒரு வியப்பூட்டும் தகவல்

நானோ காரை பற்றி தெரியாதவர் யாரும் இருக்க முடியாது .  அந்த அளவுக்கு இந்த வாகனம் பிரபலமடைய காரணம் என்னவென்றால் ஒரு கார் 1  லட்சம் ரூபாய் என்ற விஷயம் தான்.  நமக்கும் ஒரு கார் உண்டு என்ற ஆசையில் நடுத்தர குடும்பத்தினர் பலர் இந்த காரை வாங்கி வைத்துள்ளனர்.   இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தானே என்று நினைகிறீர்கள் ..  ஆனால் இப்ப சொல்ல போகும் விஷயத்தை கவனியுங்கள்.  
 
 
 
டாடா நிர்வாகம் புதிதாக தயாரித்துள்ள இந்த புதிய நானோ காரின் விலை 22  கோடி தானாம்.  ஐயோ ....!   முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளி கொண்டு இந்த வாகனத்தை உருவாக்கி உள்ளனர்.    இந்த வாகனம் தற்பொழுது டாடாவின் தங்க நிறுவனமான கோல்ட் பிளஸ் ல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  இந்த வாகனம் விற்பனைக்கு அல்ல என்று நிறுவனத்தின் மூத்த அதிகாரி அறிவித்துள்ளார்.   ( நன்றி :  தி டைம்ஸ் ஆப் இந்தியா ) 
 
 
 (இது எப்படி இருக்கு .? சூப்பருங்கோ )
 
 
 
(எங்களாலே பார்க்க தான் முடியும்..   வேறென்ன செய்ய  ..?)
 
 
எல்லாம் சரிதான் ... நாம எப்ப கார் வாங்கிறது அப்படின்னு கவலை படாம நிம்மதியா இருங்க .  உங்களுக்கு கிடைக்க வேண்டியது சரியான சமயத்தில் சரியா கிடைக்கும் .
 

செவ்வாய், செப்டம்பர் 27, 2011

மருத்துவம் தொழிலா ..? சேவையா ...?



ஜனத்தொகை பெருகி வரும் இந்த உலகில்புதிய புதிய நோய்களும் பெருகி கொண்டு தான் இருக்கின்றன.   அது மாத்திரமல்ல மருத்துவர்களும் பெருகி கொண்டே இருக்கிறார்கள்.   உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி இந்தியாவில் கிட்டதட்ட 4 . 4  லட்சம் மருத்துவர்கள் உள்ளனர் .   கிட்டத்தட்ட 273  மருத்துவ கல்லூரிகளின் மூலம் 32000  மருத்துவ மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர்.    ஏழை வீட்டில் பிறந்த நன்கு படிக்கும் மாணவன் முதற்கொண்டு பல லட்சங்களை பணமாக கட்டி படிக்கும் மாணவன் என மருத்துவ மாணவர்களை வகை பிரிக்கலாம்.
இவை எல்லாம் ஒரு பக்கம் ஒரு நிம்மதியை கொடுத்தாலும் பெரும்பாலான மருத்துவர்கள் மருத்துவத்தை சேவையாக நினைகின்றனரா அல்லது தொழிலாக செய்கின்றனரா என்பது தான் நம்மை போன்ற பொது ஜனத்தின் சந்தேகம்.    நேற்று நான் சந்தித்த ஒரு சம்பவம் என் மனதை மிகவும் பாதித்தபடியால் இந்த பதிவை எழுத வேண்டிய கட்டயதிற்குள் வந்து விட்டேன்ஒரு 60  வயது தாயார் ஒருவர் நெஞ்சு வலியின் காரணமாக ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்திருந்தார்.   மிக அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அந்த தருணத்தில் நிலைமை மருத்துவருக்கு அறிவிக்கப்பட்ட பிறகும்தன்னை நாடி வந்திருந்த மருந்து விற்பனை பிரதிநிதிக்கு சமயம் கொடுத்து தங்கள் வியாபாரத்தை பேச ஆரம்பித்து விட்டார்வேறென்ன சொல்லுவதுநெடு நேரம் காத்திருந்த அந்த முதியவர் வேறு மருத்துவமனையை நாடி சென்றது தான் கொடுமை.

என்ன நினைக்கிறார்கள் இந்த மருத்துவர்கள்பல லட்சம் செலவழித்து மருத்துவம் படித்தால் பணத்தை குறித்து அக்கறை வராமல் வேறென்ன வரும் என்கிறார் இந்த பொது ஜனம்.   நாமும் வேறென்ன சொல்லுவது .   நோயாளிகளிடம் காண்பிக்கும் அக்கறையை விட மருந்து விற்பனை பிரதிநிதிக்கு கொடுக்கும் முக்கியத்திற்கு வேறென்ன காரணம் இறக்க முடியும்...?   தரம் குறைந்த மருந்துகளை பரிந்துரைக்க அவர்களுக்கு கிடைக்கும் அற்ப பணத்திற்காகவும் வெகுமதிக்காகவும் அல்லாமல் வேறெதற்குசுகாதாரத்தை பேண வேண்டிய மருத்துவமனைகள் சிலவற்றில் நுழைந்தவுடன் ஏற்படும் வாசனை (?)  சகிக்கமுடியாதுஏன் அதை கூட சரி பண்ண மருத்துவர்களுக்கு சமயம் கிடைக்கவில்லை போலும்.   என்ன சொல்லுவது ... என்னவோ யாதோ என பயந்து வரும் நோயாளிகளை பார்த்து ஒரு புன்முறுவல் கூட செய்யாமல் தங்கள் மேதாவித்தனத்தை காட்டும் மருத்துவர்களும் உண்டு..... 

ஆனாலும் எல்லா மருத்துவர்களும் அப்படி என்று சொல்ல முடியாது.   கடுமையான விபத்தில் சிக்கி கால்கள் ஒடிந்த நிலையில் ஒரு வாலிபன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட போது , ஒரு மருத்துவர் கையில் அணிவதற்கு கையுறை தேடி கொண்டிருக்கதற்செயலாய் அந்த பக்கம் வந்த இன்னொரு மருத்துவர் தான் நல்ல ஆடைகளை அணிந்துருந்தும் அதை பொருப்படுத்தாது ஓடி சென்று தனது கைகளினால் அந்த கால்களை தாங்கி பிடித்த காட்சியையும் கண்டு நெகிழ்ந்திருக்கிறேன்.   வெறும் 25  ருபாய் ,  50  ருபாய் மாத்திரம் பீஸ் வாங்கும் மருத்துவர்கள் 80 கிமீ பிரயாணம் செய்து வந்து மருத்துவம் பார்ப்பதையும் அறிந்திருக்கிறேன்.  

ஆனால் கடவுளுக்கு அடுத்தபடியாக போது ஜனம் இவர்களை நினைத்திருக்கமருத்துவம் என்ற புனிதமான சேவை வியாபாரம் ஆகும் கொடுமை தீர்ந்தால் தான் உண்மையான சேவை செய்யும் மருத்துவர்கள் கூட மதிக்கப்படும் நிலை வந்திருக்கிறது என்றால்அது கூட மறுக்க முடியாது என்றே நினைக்கிறன்
                                                                                                                              


திங்கள், செப்டம்பர் 26, 2011

உலகின் அதிவேக ரெயில்கள் ( தொடர் வண்டிகள் ) - ஒரு ரிப்போர்ட்

போக்குவரத்து துறையில் தொடர் வண்டிகளின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதை நாம் மறக்க முடியாது.  நாள் தோறும் இந்த துறை புதிய நவீனங்களை புகுத்தி சாதனை படைக்கிறது என்பது உண்மை.   உலகில் உள்ள மிக வேகமான 5  தொடர் வண்டிகளை குறித்த ஒரு தொகுப்பை நாம் பார்க்கலாமே....
 
1 . KTX  - 2   ( ஐந்தாவது இடம்)
 
 
தென் கொரியாவை சேர்ந்த இந்த ரெயிலின் வேகம் மணிக்கு 218  மைல்.   25 KV  மின்சக்தியின் துணை கொண்டு இயக்கப்படுகிறது.  இந்த ரெயில் 2009 ம் ஆண்டிலிருந்து ஓடி கொண்டிருக்கிறது. 
 
 
2 . TGV  ரேசியு - ( நான்காவது இடம்)
 

பிரான்சை சேர்ந்த இந்த ரெயிலின் வகம் மணிக்கு 236 .12  மைல்.   25 KV  மின்சக்தியின் துணை கொண்டு இயக்கப்படுகிறது.   377  பயணிகள் இதில் பயணம் செய்ய முடியும்.

3 . ஷின்கேசன் - (மூன்றாவது இடம்)
 

ஜப்பானை சேர்ந்த இந்த ரெயிலின் வேகம் மணிக்கு 275 . 2  மைல்.   25 KV  மின்சக்தியின் துணை கொண்டு இயக்கப்படுகிறது.  1964 ம் வருடத்தில் இருந்து இயக்கத்தில் உள்ளது.

4 . TR - 09  -  (இரண்டாவது இடம் )
 
 
ஜெர்மனை சேர்ந்த இந்த ரெயிலின் வேகம் மணிக்கு 279 . 5  மைல்.   மின் காந்த தத்துவத்தில் செயல்படும் இந்த ரெயிலுக்கு சுமார் 50  முதல் 100  KV  மின்சக்தி தேவைபடுகிறது.
 
5 . CRH 380 A  - ( முதல் இடம் ) 
 
 
 
 சீனாவை சேர்ந்த உலகின் இந்த அதிவேக ரெயிலின் வேகம் மணிக்கு 302 .8  மைல்.   25 KV  மின்சக்தியின் துணை கொண்டு இயக்கப்படுகிறது.   494  பயணிகளை சுமந்து கொண்டு ஷாங்காய் நகரில் இருந்து நான்ஜிங் நகருக்கு ஓடுகிறது.
 
 
டிஸ்கி :பயணிகள் கவனத்திற்கு ....   நீங்கள் செல்ல வேண்டிய  எக்ஸ்பிரஸ்  ரெயில்  இன்னும் ஒரு மணி நேர தாமதமாக  தடம் எண் 1 யை  வந்தடையும் ......
 
 
 
 

 

ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

80 மைல் வேகத்தில் காற்றில் ஓடும் புதுமை கார் - ஒரு ரிப்போர்ட்



பெட்ரோலும் டீசலும் குறைந்து வருவதால் மாற்று எரிபொருளை கண்டு பிடிக்க எல்லா விதமான ஆராய்ச்சிகளும் நடத்தப் பட்டு வருகின்றன.   இந்த நிலையில் அழுத்தப்பட்ட காற்றை எரிபொருளாக கொண்டு ஓடும் அதிவிரைவு கார் ஒன்றை டொயோட்டா நிறுவனத்தார் உருவாக்கி உள்ளனர்.



கு- ரின் ( KU _RIN ) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நவீன வாகனத்தின் சோதனை ஓட்டம் இந்த மாத துவக்கத்தில் நடைபெற்றது.   அதில் இந்த வாகனம் சிறப்பாக செயல்பட்டு 129 .2  KM / H  வேகத்தில் ( 80  மைல் வேகத்தில்சென்று கின்னஸ் சாதனை செய்துள்ளது.   தனது நீண்ட நாள் கனவு என இதை தயாரித்துள்ள நிறுவனம் இதை வர்ணித்துள்ளது.   இந்த வாகனத்தின் வேகத்தை பார்த்தவர்கள் இது ஒரு சிறிய ராக்கெட் என்று வர்ணித்தனர்.

மிக அதிக வேகத்தில் சென்றாலும் , சில ஆரம்ப கட்ட குறைபாடுகள் உள்ளனகுறிப்பாக இதில் ஒருவர் மட்டும் தான் பயணிக்க முடியும்இது ஒரு மூன்று சக்கர வாகனம்.   இரண்டு கிலோ மீட்டருக்கு ஒரு முறை இதற்க்கு அழுத்தப்பட்ட காற்று நிரப்ப வேண்டும்.

இது ஒரு சோதனை ஓட்டம் தானேவிரைவில் குறைகள் சரி செய்யப்பட்டு நமது சாலைகளிலும் இந்த வாகனத்தை எதிர்பார்ப்போம்.