சனி, நவம்பர் 05, 2011

தூக்கம் வரவில்லையா - எளிய மருத்துவம்


நம்மில் அநேகர் சரியான தூக்கம் இல்லாமல் அவதி படுகிறோம் .  அப்படி சரியான தூக்கம் வராமல் அவதி படுபவர்கள் கீழ்க்கண்ட எளிய மருத்துவத்தை உபயோகித்து பார்க்கலாமே 



  1. இரவில் உணவருந்திய பின் ஒரு தேக்கரண்டி தேன் சாப்பிடுங்கள் .  நிம்மதியாக தூங்கலாம் .
  2. வெங்காயத்தை நெய் விட்டு வதக்கி சாதத்தோடு பிசைந்து சாப்பிட தூக்கம் இல்லாமல் துன்பப்படும் நோய் குணமாகும் .   நரம்புகளுக்கு நல்ல வலு கிடைக்கும்.
  3. இரவில் தூக்கம் வரவில்லை என்றால் , கசகசாவை தூள் செய்து வைத்து கொண்டு படுக்க போகும் போது அதை பாலில் கலந்து சாப்பிடுங்கள் .  சுகமான தூக்கம் வரும் .
  4. இரவில் தூங்கும் முன் சூடான பசும்பாலில் தேன் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும் .  நியாபக சக்தி பெருகும் .
  5. தூங்கும் போது கண்டபடி தூங்க கூடாது .  பொதுவாக வலக்கை பழக்கமுள்ளவர்கள் இடப்புறமாகவும் ,  இடக்கை பழக்கமுள்ளவர்கள் வலது புறமாகவும் திரும்பி படுக்க வேண்டும். 
  6. எந்த கரங்களுக்கு வேலை மிகுதியோ அந்த கரம் மேலே இருக்கும் படி படுத்து தூங்கினால் தான் சரியான ஒய்வு கிடைக்கும் . 
  7. இரவில் படுக்கும் முன் இரண்டு கால்களையும் நன்றாக அழுத்தி தேய்த்து விடுங்கள் .  நல்ல தூக்கம் வரும் .  புத்துணர்ச்சியும் கிடைக்கும் .
 டிஸ்கி :   யாருக்கும் கெடுதல் நினைக்காமல் ,  யாரையும் கெடுத்து பேசாமல் கடவுளுக்கு பயந்து வாழுங்கள் ..   நல்ல தூக்கம் வரும் .   செய்து தான் பார்ப்போமே ....

Related post



10 கருத்துகள்:

  1. டிஸ்கியை டிப்ஸோடு சேர்த்தே சொல்லியிருக்கலாம். மொத்தத்தில் நல்ல டிப்ஸ்....

    பதிலளிநீக்கு
  2. @ இளையதாசன் : தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  3. @ துரை டேனியல் : தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  4. @ கூடல் பாலா : தங்கள் தொடர்ச்சியான வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  5. @ Arun Ambie ; தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு