செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

காணாமல் போன விளையாட்டுகள்

எத்தனை விளையாட்டுகளை உன்னால் கூற முடியும் என்று நாம் இப்போதுள்ள சிறுவர்களிடம் கேட்டால் நிச்சயமாக அவர்கள் சொல்லுவார்கள். கிரிக்கெட் , கால்பந்து , கைப்பந்து , டென்னிஸ் , கூடை பந்து .....இன்னும் அநேகர் வீட்டை விட்டு வெளியே வருவது கிடையாது . கணிப்பொறியில் தான் அவர்கள் விளையாடுவது.

ஆனால் எமது சிறுவயதில் மேற்கண்ட விளையாட்டுகளை விளையாடியது கிடையாது. நாங்கள் விளையாடிய அநேகம் விளையாட்டுகள் இப்போது மறைந்தாலும் , நெஞ்சத்தை விட்டு அகலவில்லை.



1 . ஐஸ் பால் ரெடி  :  தெருவில் உள்ள எல்லாரும் இரவு 7 மணிவாக்கில் ஒன்றாக கூடுவோம். தெருவில் உள்ள விளக்கு கம்பம் தான் முக்கியமான இடம்.  இது ஒரு வகையான ஒளித்து விளையாடுவது தான் . ஒருவர் கண்களை மூடி எண்களை எண்ணி கொண்டிருக்க, நாங்கள் பல இடங்களில் ஒளித்து கொண்டிருப்போம். யார் தேடி வருகிறார்களோ , அவர்கள் யாராவது பார்த்தால் ஓடி சென்று அந்த விளக்கு கம்பத்தை தொட்டு ஐஸ் பால் ரெடி என்று சொல்ல வேண்டும். அப்படி தொடுவதற்கு முன்பு அவரை பிடிக்க வேண்டும். அப்படி பிடித்து விட்டால் அந்த நபர் மறுபடியும் மற்றவர்களை தேட வேண்டும். சில நாட்கள் இரவு 11  மணி வரை விளையாடிய தருணங்கள் உண்டு. அதனால் தான் பயம் என்று ஓன்று அந்த கால சிறியவர்களுக்கு  கிடையாது. ஆனால் இப்போது நம் பிள்ளைகளை பாருங்கள். சிறிது மின்சாரம் தடைபட்டாலும் அவர்களால் பயப்படாமல் இருக்க முடியவில்லை

 
2 . மட்டை பந்து : இரு அணிகளாக பிரித்து கொள்ளப்படும் . ஒவ்வொரு அணிக்கும் ஒரு தலைவர் இருப்பார்.  நடுவில் இரண்டு கற்களுக்கு மேலாக ஒரு பனை மட்டை வைக்கப்படும் .  குறிப்பிட்ட தூரத்தில் இருந்து அந்த மட்டையை நோக்கி பந்தை எறிவார்கள். அப்பொழுது மட்டை கீழே விழுந்தால் எதிர் அணியில் ஒருவர் ஆட்டமிழப்பார். மட்டை கீழே விழும் போது மட்டையையாவது அல்லது பந்தையாவது பிடித்தால் அவர் ஆட்டம் இழக்க மாட்டார். இதில் ஒத்தை குட்டி , இரட்டை குட்டி என்றெல்லாம் பதங்கள் பயன்படுத்தப்படும். ஒருவருக்கொருவர் உதவும் பண்பு இந்த விளையாட்டில் அதிகமாக காணலாம்.

இவைகளை நினைக்கும் போது விளையாட ஆர்வம் உண்டு. ஆனால் ஆட்கள் தான் இல்லை.




நண்பர்களே இந்த பதிவை விரும்பினால் , நீங்களும் காணாமல் உங்கள் விளையாட்டுகளை பகிரலாமே

Related post



2 கருத்துகள்:

  1. Remember 'pandy' with grids drawn on the floor and we skip with one foot sliding and chasing a flat rock?! That was my favorite...

    Then of course the one with 6 rocks, we throw one in the air and collect one one rock first and then throw one rock in the air and collect two two rocks and it goes on...

    Pautima wouldn't let us play the second one at home - no idea why.

    பதிலளிநீக்கு