செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

பிரச்சனையை பார்ப்பதை காட்டிலும் தீர்வை பார்ப்பது மேலானது

அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை குறித்து கேள்விபடாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. மனிதனை விண்வெளிக்கு அனுப்புவதில் முதல் படியை அடைந்த நாசா நிறுவனத்திற்கு பெரிய சவாலான பிரச்சனை ஓன்று வந்தது.

அதாவது விண்வெளி வீரர்கள் எடுத்து சென்ற மை பேனாக்கள் விண்வெளியில் வேலை செய்யவில்லை. காரணம் பூஜ்ஜிய ஈர்ப்பு விசையின் காரணமாக மை பேனாவில் உள்ள மை காகிதத்தில் விழவில்லை. பத்தாண்டுகள் செலவழித்து , கிட்டத்தட்ட 12  மில்லியன் டாலர் செலவில் ஒரு புதிய பேனாவை கண்டுபிடித்தனர். அந்த பேனா தண்ணீருக்கு அடியிலும் எழுதும். உறைந்த பனியில் இருந்து 300  டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் எழுதும். நிச்சயமாக இது ஒரு பெரிய முயற்சி தான். அதற்காக அவர்கள் கொடுத்த விலையும் அதிகம்.
 
ஆனால் இதே சூழ்நிலை ரஷ்யாவில் ஏற்பட்டபோது , ரஷ்ய விண்வெளி வீரர்கள் மை பேனாக்களுக்கு பதிலாக பென்சில் பயன்படுத்தினார்கள். என்ன ஒரு எளிதான தீர்வு பாருங்கள்.
 
நண்பர்களே.., பொதுவாக இப்படி ஒரு வார்த்தை சொல்லுவார்கள். " ஒரு பிரச்சினைக்கு பல தீர்வுகள் உள்ளது ". ஆனால் பல வேளைகளில் நாம் தீர்வுகளை தேடுவதில்லை. பிரச்சினைகளை ஆழமாக அலசுகிறோம். அதினால் கிடைப்பது என்னவோ மனக்குழப்பமும் பணக்கஷ்டமும் தான். உங்கள் பிரச்சினைக்கு தீர்வு தொலைவில் அல்ல. அது உங்கள் பக்கத்தில் தான் உள்ளது. எனவே பிரச்சினையை பார்த்து அல்ல... தீர்வை நோக்கி ஓடுவோம். வெற்றியும் பெறுவோம் 

 
உங்களுக்கு இது பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை பதிவு செய்யலாமே. பிடிக்கவில்லை என்றால் அதையும் எழுதலாமே..

நட்புடன் ...
உங்கள் நண்பன்
 
 

Related post



1 கருத்து: