திங்கள், செப்டம்பர் 12, 2011

கீழே விழும் செயற்கை கோள் - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்

பரந்து விரிந்த விண்வெளியில் கைவிடப்படும் செயற்கை கோள்கள் , உடைந்த பாகங்கள்,  மற்றும் விண்வெளிக்கலங்களில் இருந்து சிதறிய பாகங்கள் போன்றவை குப்பைகளாக பூமியை சுற்றி வருகின்றன.  இவற்றை விண்வெளி குப்பைகள் என்று அழைப்பர்.  
 

இந்த விண்வெளி குப்பைகள் அடிக்கடி பூமியின் ஈர்ப்பு விசைக்குள் நுழைந்து விட்டாலும் ,  கடவுள் இயற்கையாகவே வைத்திருக்கிற பாதுகாப்பு மண்டலத்தால் ,  பூமிக்குள் நுழையும் முன்பாகவே எரிந்து போய்விடும் .
 
ஆனால் இப்போது புதிதாக ஒரு ஆபத்து வந்திருக்கிறது.   பல வருடங்களுக்கு முன்பு நாசா விண்வெளி ஆய்வு கூடம் அனுப்பிய UARS  ( Uppar Atmosphere  Research  Sattelite ) என்ற செயற்கை கோள் ஓன்று விண்வெளி குப்பையாக பூமியை சுற்றி வந்தது.  12500  பவுண்ட் எடையுள்ள அந்த செயற்கை கோள் இப்பொழுது பூமியின் மேல் விழக்கூடும் என்று எதிர்பார்க்க படுகிறது.


கிட்டத்தட்ட 100  மைல் வேகத்தில் 300  பவுண்ட் எடையுள்ள 26  பாகங்களில் ஏதாவது ஓன்று பூமியை தாக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   ஆனால் 3200  வாய்ப்புகளில் எதாவது 1  வாய்ப்பில் மாத்திரம் இப்படி நடக்கக்கூடும் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது.    ஆனால் பொதுவாக இவை காற்று மண்டலத்திற்குள் நுழையும் போதே எரிந்து விடும்.  அப்படியும் ஏதாவது தாக்கினால் , கடந்த 50  வருடங்களாக நடக்காத ஒரு நிகழ்வு தான் இது என்று நாசா விண்வெளி ஆய்வு கூடத்தின் பிரதான பொறியாளர் ஜோன்சன் அறிவிக்கிறார்  ( நன்றி  :  நாசா செய்திகள் ) 
 
 
பிறகென்ன .... கொஞ்சம் தலைக்கு மேல பார்த்து கொண்டே நடந்து போங்க .... ஒன்னும் ஆகாது ...
 

Related post



2 கருத்துகள்:

  1. அட சாவுகிராக்கி வீட்டில சொல்லீற்ரா வந்தனி?...
    பூமியப் பாத்து நட .வானத்தப் பாத்துக்கொண்டு நடக்கிற அழகப் பாரு போறபோக்கப் பாத்தா சந்திர மண்டலத்தில வீடு கட்டினாலும் கட்டுவ போல லூசு.................
    பாருங்க சகோ நீங்க சொன்னதக் கேட்டுப் போனதால
    அந்த ஆளு என்ன பேச்சுப் பேசுறார் எண்டு........

    மிக்க நன்றி சகோ புதிய தகவலுக்கு .......

    பதிலளிநீக்கு
  2. சரி விடுங்க ... ஹி ஹி .... தங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு