வெள்ளி, செப்டம்பர் 16, 2011

விலையேறி போச்சு பெட்ரோல் - விளங்கியதும் .. விளங்காததும்


காலையில் தான் ஊருக்கு போய் விட்டு வந்தவுடன் பைக்குக்கு பெட்ரோல் போடுவதற்கு போனேன்என்னை பார்த்தவுடனே பெட்ரோல் போடும் நபர் சொன்னார் " சார் ... விலை கூடி போச்சுரூபாய் 14  காசு " .  சத்தம் போடாமல் பெட்ரோல் போட்டு விட்டு வந்து இதை பற்றி கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தேன் .   கொஞ்சம் விளங்கியதுகொஞ்சம் விளங்கவில்லை ( மரமண்டை என்று நீங்கள் சொன்னால் கூட பரவாயில்லை )


விளங்கியது ...!
பெட்ரோல் விலை கூடும் போதெல்லாம் இப்படி ஒரு வார்த்தையை எல்லாரும் சொல்லுவார்கள் " சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை ஏறி விட்டதுஎன்று.   அது என்ன ... சர்வதேச சந்தை என்று நீங்கள் நினைக்கலாம்ஒபெக் என்று ஒரு கூட்டமைப்பு உள்ளதுஉலகில் உள்ள கச்சா என்னை ஏற்றுமதி செய்யும் சில நாடுகள் சேர்ந்து ஏற்ப்படுத்தி கொண்ட கூட்டமைப்பு.   அல்ஜிரீயாஅங்கோலாஈகுவடார்ஈரான் , ஈராக்,   குவைத் ,   லிபியா ,   நைஜீரியா,   கத்தார் ,   சௌதி அரேபியா ,   ஐக்கிய அரபு எமிரேட்ஸ்   மற்றும்  வெனிசுலா   ஆகிய  நாடுகள்  இப்பொழுது  இந்த கூட்டமைப்பில் உள்ளது.   


இவர்கள் தான் ஒட்டு மொத்த உலகின் எண்ணெய் விலையை நிர்ணயம் செய்கின்றனஇந்த நாடுகளுக்கு எண்ணையை விட்டால் வேறு ஒன்றும் கிடையாதுஅதனால் இந்த நாடுகள் எல்லாமே எண்ணையை நம்பித்தான் இருக்கின்றன என்றால் அது பெரிய உண்மைஅதனால் வெகு வேகமாய் குறைந்து வரும் எண்ணெய் வளத்தை இன்னும் கொஞ்ச வருடங்களுக்கு நீடிக்க இவைகள் உற்பத்தியை குறைத்து விட்டனஆனால்  தேவை தான் உங்களுக்கே தெரியுமே ..

இவர்களிடம் இருந்து உலக நாடுகள் பேரெல் ( BARREL ) என்ற கணக்கில் எண்ணையை வாங்குகின்றன.   அது என்ன BARREL  என்று நினைக்கலாம்நாம் பொதுவாக BARREL  என்றால் 200  லிட்டர் என்று நினைப்போம்ஆனால் 1  BARREL  கச்சா எண்ணெய் என்னப்படுவது  42  யுஎஸ் கேலன் அதாவது கிட்டத்தட்ட 159  லிட்டர் என்று பொருள் படும்


அது என்ன கச்சா எண்ணெய் என்று கேட்கலாம்இது தான் பூமியில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்பிறகு இதை சுத்திகரித்து பின்வரும் பல பொருட்களை பிரித்தெடுப்பர்.   நாப்தா ,  வெள்ளை பெட்ரோல்                ( விமானங்களுக்கு ) ,   சாதாரண பெட்ரோல்  ,  டீஸல்   என்ஜின் ஆயில் ,  கியர் ஆயில் ,  கிரீஸ் மற்றும் தார்

2010  -  2011  வருடத்தில் சராசரியாக 85 .09  டாலராக ( ஒரு BARREL  ) இருந்த கச்சா எண்ணெய் போன ஆகஸ்ட் மாதத்தில் 106 .94  டாலராக மாறி இந்த மாதத்தில் 111 .64  டாலராக ( ஒரு BARREL )  உயர்ந்துள்ளதுகிட்டத்தட்ட சென்ற நிதி ஆண்டில் இருந்து 31 % உயர்ந்துள்ளதுஅதனால் தான் விலைருபாய் 14  காசு உயர்ந்துள்ளது என்கிறது அரசு.   நானும் கொஞ்சம் புரிந்து கொண்டேன்.

விளங்காதது :
1 . எண்ணெய் நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட 5300  கோடி இழப்பு ஏற்படும் என்று அறிக்கைகள் சொல்லுகிறது.   இருப்பினும்லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் அதன் அதிகாரிகள் தாங்கள் வாங்கும் சம்பளம் போதாது என்று போராடுவது விளங்கவில்லை.

2 . நட்டமாய் ஓடி கொண்டிருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் நவரத்னாமகாரத்னா  என்ற அந்தஸ்துக்கு எப்படி உயர்த்தப்படுகிறது என்பதும் விளங்கவில்லை.

3 . பல பெரிய விளம்பரங்கள் கொடுத்து எண்ணெய் விற்ப்பனையை பெருக்கிநஷ்டத்தை அதிகமாக்கும் ரகசியமும் விளங்கவில்லை.  

4 . எத்தனை முறை விலையை கூட்டினாலும்வாகன தேவையை குறைக்காமலும் , வாகன எண்ணிகையை அதிகமாக்கி கொண்டே இருக்கும் என்னை போன்றவர்களின் மன நிலையும் விளங்கவில்லை

இந்த பதிவு உங்களுக்கு விளங்கினாலும் விளங்காவிட்டாலும் உங்கள் விளக்கத்தை கொஞ்சம் விளக்கலாமே ....

டிஸ்கி  :   சீக்கிரம் பைக்கை கொடுத்துவிட்டு நல்ல குதிரை ஏதாவது வாங்கணும்நல்ல குதிரை இருந்தால் அதையும் சொல்லுங்களேன்




Related post



2 கருத்துகள்:

  1. தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி . தாங்கள் சொல்லுவது உண்மை என்றாலும் வெகு சீக்கிரம் அந்த நிலை வந்தாலும் ஆச்சரியம் ஒன்றும் இல்லை

    பதிலளிநீக்கு