வியாழன், ஆகஸ்ட் 18, 2011

உண் நம்பிக்கை வீண் போகாது ......!


 
பரவலாக என் காதுகள் கேட்க , பலர் சொல்லியிருகின்ற்னர் "இனி மேல் நம்பிக்கை இல்லை". சில வேளைகளில் மருத்துவமனைக்கு செல்லும் போது , இந்த வார்த்தைகளை மருத்துவர்கள் சில உறவினர்களிடம் சொல்ல கேட்டிருக்கிறேன். சில வேளைகளில் மிக பெரும் போராட்டங்களை சந்திக்கும் போதும் , இந்த வார்த்தைகள் பேசப்படுகிறது. ஆனால் எங்கெல்லாம் இந்த "நம்பிக்கை இல்லை" என்ற வார்த்தைகள் வெளிப்படுகின்றதோ அங்கெல்லாம் வேதனையும் துக்கமும் நிறைந்திருக்கிறதை கவனித்திருக்கிறேன்.



புனித வேதாகமத்தில் யோசேப்பு என்கிற மனிதனை குறித்து சொல்லபட்டிருக்கிற வாக்கியங்கள் என் மனதை மிகவும் பாதித்தவை. இந்த யோசேப்பு தகப்பனால் மிகவும் நேசிக்கபட்டவன். பதினோரு சகோதரர்கள் இவனுடன் பிறந்தார்கள். ஒரு நாள் சர்வ வல்ல இறைவன் யோசேப்பின் எதிர்காலத்தை குறித்து ஒரு சொப்பனத்தை காண்பித்தார்.


நண்பனே...! நீ இதை நம்பி தான் ஆக வேண்டும். " உன்னை குறித்து ஒரு மேன்மையான திட்டம் கடவுளிடம் உண்டு". 

யோசேப்பு தன் சகோதரர்களிடத்தில் இதை சொன்ன போது, அனைவரும் அவனை பகைத்தார்கள். அவனை வெறுத்தார்கள் . அந்நியரிடத்தில் அவனை விற்று போட்டார்கள். இது அத்தனையும் நேரிட்ட போது அவனுக்கு வயது 17 .

பிறகு இன்னொரு தேசத்தில் அடிமையாக விற்கப்பட்டான். பொய்யான பல குற்றசாட்டுகள் அவன் மேல் சாட்டப்பட்டது. சிறைச்சாலையில் அடைக்கப்பட்டான்.

ஆனால் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவெனில் உலகத்தின் பார்வையில் நம்பிக்கை இல்லாத போதும் , கிட்டத்தட்ட 30 வயது வரை அவன் எல்லாவற்றையும் நம்பிக்கையோடு சகித்தான். 13 வருடங்கள் அவன் பட்ட வேதனை விவரிக்க முடியாது. ஆனாலும் அவன் தன்னை படைத்த தேவனை நம்பினான். அந்த தேவனின் திட்டம் நிச்சயமாக தான் வாழ்வில் நிறைவேறும் என நம்பினான். அது அப்படியே நடந்தது.



ஒரு வேளை அவனது நம்பிக்கை குறைந்தது என்றால் என்னவாகியிருக்கும்...? நம்மில் அநேகரை போல் விரக்தி நிறைந்த வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்திருப்பான். சற்று யோசித்து பாருங்கள்.

 உண் நம்பிக்கையின் அளவு என்ன..? நண்பா ......நடுக்கடலில் விழுந்தாலும் , கரையேற துடிக்கும் உன் நம்பிக்கை எங்கே...? தட்டி எழுப்பு. நம்பிக்கை நெருப்பு கொழுந்து விட்டு எரியட்டும். கடைசியில் ஓன்று சொல்லுகிறேன். உண் நம்பிக்கை வீண் போகாது ......!

Related post



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக