செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

உனக்கு ஒரு வழியுண்டு....

சில பல நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பலர் என்னிடம் சொன்னது என்னவெனில் " நான் இப்போது இருக்கும் சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியவில்லை ... ஒரு வழியும் இல்லை. எல்லாம் வழியும் அடைக்கபட்டுவிட்டது".




சிலருக்கு கடன் ஒரு பிரச்சினை. சிலருக்கு வேலை இன்மை . வேறு சிலர் ஏமாற்றம் நிறைந்த அனுபவங்களை கொண்டிருந்தார்கள்.



நான் கொஞ்சம் ஆழ்ந்து இதை சிந்தித்து பார்த்தேன். பல முறை ஆண்டவரிடமும் கேட்டேன். பல நாட்கள் கழித்து எனக்கு பதில் கிடைத்தது. நான் பெரிய தண்ணீர் சேகரிக்கும் தொட்டி வழியே கடந்து சென்றேன். அது முழுவதும் மூடபட்டிருந்தது. ஒரு நபர் அந்த தொட்டியை சுத்தம் செய்வதற்காக அதற்காக இருந்த சிறு துவாரத்தின் வழியாக சென்றார்.



இப்போது ஆண்டவரின் குரல் என் உள்ளத்தில் " நீ என்ன நினைக்கிறாய் அந்த மனிதனை குறித்து".

நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை.

இப்போது மறுபடியும் ஆண்டவர் " உள்ளே இருக்கும் அந்த மனிதன் தன்னை சுற்றி பார்த்தால் எப்படியிருக்கும்?" .

நான் சொன்னேன் " இருட்டாக ".

உடன் ஆண்டவர் கேட்டார் " அவன் இறந்து விட்டான் என நினைகிறாயா?" .

நான் சொன்னேன் " அது எப்படி..... அவன் உயிர் வாழும் வாய்ப்பு அங்கு இல்லையெனில் எப்படி அவனை அங்கு அனுப்புவார்கள். அவன் உயிர் வாழும் படி காற்று உள்ளே போகிறதே!"

ஆண்டவர் சொன்னார் " மிக சரியாக சொன்னாய் ...நீ இந்த உலகில் உயிரோடு இருக்கிறாய் என்றால் உனக்கு ஒரு வழி திறந்து இருக்கிறது என்று அர்த்தம். உன் கண்களின் பார்வைக்கு ஒரு வேளை வழி ஒன்றும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் உனக்கு ஒரு வழியுண்டு அதனால் தான் நீ ஜீவனோடு இருக்கிறாய் "



நண்பனே..... வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல. தற்காலிகம் தான். தவறான முடிவுகள் உன் வாழ்வை அழித்துவிடும். நம்பு " உனக்கு ஒரு வழியுண்டு"

Related post



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக