சனி, அக்டோபர் 08, 2011

வானத்தில் பறக்கும் காற்றாலை - ஒரு அதிசய தகவல்

பூமியில் காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பது நாம் அனைவரும் அறிந்த தகவல்.   அதிகப்படியான காற்றாலைகள் அமைக்க போதிய வசதி நிலப்பரப்பில் இல்லையெனில் என்ன செய்ய என்று யோசித்ததின் விளைவு இந்த வானத்தில் பறக்கும் காற்றாலை.  

Sleek  20 KW  Wing  7  prototype என பெயரிடப்பட்டுள்ள இந்த காற்றாலை விமானத்தை போல காற்றில் பறக்கும் சக்தி கொண்டது.    காற்று எங்கே வேகமாகவும் தொடர்ச்சியாகவும் உள்ளதோ அந்த இடத்திற்கு இது கடந்து செல்லும்.  எனவே இந்த படைப்பு சாதாரண காற்றாலைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.  

கிட்டத்தட்ட 1500  அடி உயரம் வரை பறக்கும் சக்தி கொண்ட இந்த பறக்கும் காற்றாலை நம்ம ஊர் பட்டம் போல பெரிய கயிறு / தாம்பு கொண்டு தரையில் இணைக்கப்பட்டிருக்கும்.   8  மீட்டர் நீளமுடைய இறக்கைகளை கொண்ட இந்த பறக்கும் காற்றாலை 56  கிலோ எடை கொண்டது.   மணிக்கு 22  மைல் வேகத்தில் வீசும் காற்றில் இருந்து 20 KW  மின்சாரம் உருவாகும் சக்தி கொண்ட இந்த காற்றாலை உருவாக்கப்பட்ட மின்சாரத்தை இணைக்கப்பட்டுள்ள இணைப்பின் வழியே பூமிக்கு மின்சாரத்தை அனுப்பும் திறம் படைத்தது



இந்த கண்டுபிடிப்பு POPULAR MECHANICS ன் 7 வது ஆண்டு விருதை பெற்றுள்ளது.  அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த Makani power  என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

டிஸ்கி :  பறவைகளினால் இந்த பறக்கும் காற்றாலைக்கு ஆபத்து வருமா என்ற கேள்விக்கும் இதே போல் இரண்டு அல்லது மூன்று காற்றாலைகள் செயல்படும் போது ஒன்றுடன் ஓன்று சிக்கி கொள்ளாதா என்ற கேள்விக்கும் இது வரை சரியான பதில் கிடைக்கவில்லை.  இருந்தாலும் இது கண்டுபிடிப்பின் ஆரம்பம் தானே ... சரி செய்யப்படும் என்று எதிர்பார்ப்போம்.

Related post



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக