திங்கள், அக்டோபர் 03, 2011

கண்ணுக்கு புலப்படாத சாவி - இன்று ஒரு தகவல்


தைவானை சேர்ந்த ஆராச்சியாளர்கள் சிலர் சேர்ந்து கண்ணுக்கு புலப்படாத சாவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.   அதாவது கதவை திறப்பதற்கு நாம் பயன்படுத்தும் சாவி இல்லாமல் வெறும் கையின் சைகைகளை கொண்டு கதவை திறப்பத்ர்க்கான புதிய முயற்சி தான் இது.



இந்த நவீன தொழில்நுட்பத்தின் மூலமாக ஒரு சிப் செயல்படுகிறதுஇந்த சிப் 3 பரிமாணங்களில் அசைவுகளை கண்டறியும் சக்தி படைத்தது.   இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பயனாளிகள் தங்கள் கையின் சைகைகளை ஏற்கெனவே இதில் பதிந்து வைத்திருக்க வேண்டும்அதனால் எப்பொழுதெல்லாம் சைகைகள் கான்பிக்கப்படுகிறதோ அப்பொழுது எல்லாம் சாவி இல்லாமலே கதவுகளை திறக்க இயலும்

இந்த கண்ணுக்கு புலப்படாத சாவி தொழில்நுட்பத்திற்கு ஆதரவு பெருகி வரும் நிலையில்அநேக பிரபல நிறுவனங்கள் தங்களை அணுகுவதால் இன்னும்மாதத்திற்குள் இந்த கண்டுபிடிப்பை சந்தைக்கு கொண்டுவர திட்டமிட்டிருப்பதாக தெரிவிகின்றனர் இந்த குழுவினர்.

தைபேயில் நடைபெற்ற சர்வதேச கண்டுபிடிப்புகள் கண்காட்சியில் இந்த கண்டுபிடிப்பிற்கு தங்க பதக்கம் கிடைத்துள்ளது கூடுதல் செய்தி.    வருங்காலத்தில் நீங்கள் சாவிகளை தொலைப்பது குறித்து கவலைப்பட வேண்டாம் என்கிறார் இந்த குழுவின் தலைவரான Tsai Yao Pin .


டிஸ்கி அது சரி ... சாவியை தொலைக்கிற நாங்கள் சைகைகளை மறந்து விட்டால் என்ன செய்வது என யாரோ கேட்பது தெரிகிறதுபதிலை நான் சொல்வது முறை அல்ல என்றாலும் நானே சொல்கிறேன் ... வேறென்ன வெளியில் இருக்க வேண்டியது தான்பிறகு கம்பெனியில் இருந்து வந்து சரி செய்து ஒரு நல்ல அமௌன்ட் சர்வீஸ் சார்ஜ் போடுவார்கள்.



Related post



5 கருத்துகள்:

  1. @ Saro : தங்கள் முதல் வருகைக்கும் , உங்கள் கனிவான ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  2. வெறும் கையின் சைகைகளை கொண்டு கதவை திறப்பதற்க்கான புதிய முயற்சியா

    இது நல்லாஇருக்கே

    பதிலளிநீக்கு
  3. @ vairai சதீஷ் : வாருங்கள் நண்பரே ... தங்கள் வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. Recently we were given a high model car while ours was getting serviced. Interestingly there was no key to start!

    As long as we keep a little electronic token in our pocket, as soon as we reach the car, it would unlock the doors and start the ignition!

    Cool isn't it?

    பதிலளிநீக்கு