பெட்ரோலும் டீசலும் குறைந்து வருவதால் மாற்று எரிபொருளை கண்டு பிடிக்க எல்லா விதமான ஆராய்ச்சிகளும் நடத்தப் பட்டு வருகின்றன. இந்த நிலையில் அழுத்தப்பட்ட காற்றை எரிபொருளாக கொண்டு ஓடும் அதிவிரைவு கார் ஒன்றை டொயோட்டா நிறுவனத்தார் உருவாக்கி உள்ளனர்.
கு- ரின் ( KU _RIN ) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நவீன வாகனத்தின் சோதனை ஓட்டம் இந்த மாத துவக்கத்தில் நடைபெற்றது. அதில் இந்த வாகனம் சிறப்பாக செயல்பட்டு 129 .2 KM / H வேகத்தில் ( 80 மைல் வேகத்தில் ) சென்று கின்னஸ் சாதனை செய்துள்ளது. தனது நீண்ட நாள் கனவு என இதை தயாரித்துள்ள நிறுவனம் இதை வர்ணித்துள்ளது. இந்த வாகனத்தின் வேகத்தை பார்த்தவர்கள் இது ஒரு சிறிய ராக்கெட் என்று வர்ணித்தனர்.
மிக அதிக வேகத்தில் சென்றாலும் , சில ஆரம்ப கட்ட குறைபாடுகள் உள்ளன. குறிப்பாக இதில் ஒருவர் மட்டும் தான் பயணிக்க முடியும் . இது ஒரு மூன்று சக்கர வாகனம். இரண்டு கிலோ மீட்டருக்கு ஒரு முறை இதற்க்கு அழுத்தப்பட்ட காற்று நிரப்ப வேண்டும்.
இது ஒரு சோதனை ஓட்டம் தானே . விரைவில் குறைகள் சரி செய்யப்பட்டு நமது சாலைகளிலும் இந்த வாகனத்தை எதிர்பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக