செவ்வாய், செப்டம்பர் 06, 2011

பலே தாத்தா பலே .....சுவாரசிய தகவல்


இந்திய வம்சாவளியை சேர்ந்த மாரத்தான் ஓட்ட பந்தய வீரர் தான் இவர்.   பெயர் பாஜா சிங்.  உலக சாதனை ஒன்றுக்கும் சொந்தகாரர்.  அப்படி என்ன பெரிதாக சாதித்து விட்டார் என்கிறீர்களா?  ஒன்றுமில்லை .... தன்னுடைய 92 வது வயதில் சும்மா வீட்டில் இருக்காமல் ஒரு மாரத்தான் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்டார்.  2003 ம் வருடத்தில் கனடா டொராண்டோவில் நடைபெற்ற பந்தயத்தில் பந்தய தூரத்தை சுமார் 5 மணி 40 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார்.  இப்பொழுது 100  வயதாகியிருக்கும் இவர் தன்னுடைய ஓட்ட பந்தய ஆசையை விட்ட பாடில்லை.  கடவுளுக்கு சித்தமிருந்தால் தான் சாகும் வரை ஓட ஆயத்தமாயிருக்கிறேன் என்கிறார் இந்த 100  வயது பலே தாத்தா.  ( நன்றி  : ப்ரோ ஸ்போர்ட்ஸ் )


இதெல்லாம் அழகாக படித்து முடித்த நண்பர்களே , நீங்கள் விடுகிற பெருமூச்சு இங்கே வரை கேட்கிறது. என்ன பண்ணுவது?  காலையிலே சீக்கிரமா எழும்பி கொஞ்சம் ஓடி பாருங்க 

Related post



2 கருத்துகள்:

  1. மன்மோகன் தன் பதவியை இவருடன் ஒப்படைக்கலாம் ...

    பதிலளிநீக்கு
  2. அப்படி சொல்லமுடியாது என்று நான் நினைக்கிறன் அண்ணாச்சி . Dr . மன்மோகன் சிங் அவர்களை பற்றி வெகு விரைவில் ப்ளொக்கில் எழுதுகிறேன் .

    பதிலளிநீக்கு