வியாழன், செப்டம்பர் 08, 2011

தீவீரவாதியே...... நீ ஒரு கோழை .... !


வைகறை பொழுதில் ...
மனங்கவர்ந்த வேளையில்....
எதிர்பாரா தருணத்தில்....
நாசகாரனாய் உருவெடுத்து....
குண்டுகளை வெடித்து ...
குருதியை சிந்த செய்து ...
கொடும்பாவம் செய்தவனே ...
தீவீரவாதியே...
நீ ஒரு வீரனா....?


நீ வீரனாயிருந்தால் ....

அஞ்சா நெஞ்சமும் ...
தூங்கா கண்களும் ....
தினவெடுத்த தோள்களும் ....
பனி படர்ந்த மலையிலும்
தளராத கால்களும் ....
துச்சமென உயிரை மதித்து
தாய் நாட்டை காக்கும்
எம் வீரனிடம்
நேரில் காண்பி
உன் வீரத்தை .....


முடியவில்லையா ....?

வேற்றுமையில் ஒற்றுமை
என்னும் தாரக மந்திரம் கைக்கொண்டு ..
வஞ்சனையில்லா நெஞ்சமுள்ள
உண்மை குடிமகன்
முன்பாவது
நேரில் காண்பி
உன் வீரத்தை ....

அதுவும் முடியவில்லையா ...?


தேசப்பற்றே குருதியாய்
ஓடும் எம் தாய்திருநாட்டின்
மகளிர் .....!
பாதகமறியாத எம்
பச்சிளம் குழந்தைகள் ...
யாரிடமாவது
நேரில் காண்பி
உன் வீரத்தை .....


எப்படி முடியும் உன்னால்
நீதான் கோழை ஆயிற்றே ....!


குண்டுகள் வெடித்தாலும்
எம் நெஞ்சுரம் வெடிக்காது ....
சடலங்கள் சிதறினாலும்
"வந்தே மாதரம்" சப்தம் சிதறாது ....!


எம்மை தோற்கடிக்க
நினைத்து தோற்றாயே ....!
தீவீரவாதியே......
 நீ ஒரு கோழை .... !

Related post



5 கருத்துகள்:

  1. தங்களின் ஊக்கத்திற்கு நன்றி. ஆலோசனையின் படி செய்துள்ளேன்

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. காயங்கள் சுமந்து
    கலங்கிடும் மானுடமே…
    வன்முறை இப்படி
    வளர்வது எதனால்?

    சமூக சிந்தனையுள்ள பதிவு நண்பரே..

    நட்புடன்
    சம்பத்குமார்

    பதிலளிநீக்கு
  4. உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு