ஞாயிறு, செப்டம்பர் 04, 2011

பல் வலியா.... உயிருக்கு கூட ஆபத்து வரலாம் - ஒரு ரிப்போர்ட்

பல் வலி வந்தது என்றால் நம் வீடுகளில் பொதுவாக பெரிய அளவில் சிரத்தை எடுத்து கொள்ளமாட்டார்கள். கொஞ்சம் காயம் அல்லது வெள்ளை பூண்டு இவைகளை பயன்படுத்துகிறவர்கள் அநேகர். ஆனால் பல் வலிக்கும் சரியான சிகிச்சை எடுத்து கொள்ளாவிடில் உயிருக்கே ஆபத்து என்பது நம்புவதற்கு கொஞ்சம் கடினம் தானே.
 
அமெரிக்காவில் சின்சினாட்டி எனப்படுகிற இடத்தில 24  வயது வாலிபன் ஒருவர் பல் வலிக்கு பலியானார் என்பது ஒரு அதிர்ச்சியான தகவல். கடுமையான பல் வலியினால் அவதிபட்ட அவர் பல்மருத்துவரை சந்தித்தார். நோயின் தீவீரத்தை அறிந்த மருத்துவர் உடனடியாக பல்லை பிடுங்கவேண்டும் என்று ஆலோசனை கொடுத்தார். ஆனால் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால் பல்லை பிடுங்க வாலிபர் மறுத்துவிட்டார். சில நாட்களில் வலியினால் முகம் வீக்கமடைந்தது. உடனடியாக அவசர பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் போதிய சிகிச்சை அளித்தும், பல்லில் ஏற்பட்ட நோய்க்கிருமியின் பாதிப்புகள் மூளையை பாதித்தபடியால் வாலிபர் மரித்துபோனார்.
( நன்றி :  நியூஸ் டெஸ்க் 03   09   2011  )
 
பல் வியாதிகள் எளிதில் குணமாக்க முடியும் என்றாலும், காலம் கழிந்தால் உயிருக்கு கூட ஆபத்துதான் .
 
என்ன ...? இப்பவே பல் டாக்டரை பார்க்க கிளம்பிட்டிங்களா? 

Related post



7 கருத்துகள்:

  1. என்ன பாஸ் இப்படி பயமுறுத்துறீங்க! எனிவே தேங்க்ஸ் யுவர் இன்பர்மேஷன்!

    பதிலளிநீக்கு
  2. விழிப்புணர்வளிக்கும் பதிவு.

    உண்மைதான்.

    பல்லில் எவ்வித சிக்கலும் இல்லாதவர்கள் பல்மருத்துவரிடம் சோதனைக்குச் சென்றால் கூட அவர்கள் ஆயிரம் சோதனைகள் செய்யச் சொல்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  3. வாருங்கள் முனைவரே ....தங்கள் ஊக்கத்திற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. அண்ணாச்சி ... உண்மையில் கொடுமை தான் ... என்ன செய்ய ...? தங்களின் அறிவுரைப்படி சொல் சரிபார்ப்பை சரி செய்து விட்டேன். நன்றி

    பதிலளிநீக்கு