புதன், அக்டோபர் 19, 2011

20 ம் நூற்றாண்டின் மிக பயங்கர வைரஸ்கள் - இன்று ஒரு தகவல்


20 ம் நூற்றாண்டில் மிக பயங்கர வைரஸ் தாக்குதல்கள் உலகம் முழுவதும் நடைபெற்றன.   பயந்துவிடாதீர்கள் கம்ப்யூட்டர் வைரஸ்  தான்.   ஆம் கணிப்பொறியின் தகவல்களை அழிக்கும் வகையில் எழுதப்பட்ட கணிப்பொறி நிரல் ( Computer Program ) தான் வைரஸ் என்று அழைக்கபடுகிறது.   20  நூற்றாண்டின் கணிப்பொறிகள் சில மோசமான வைரஸ்களை சந்தித்து இருந்தாலும் (  ஜெருசலேம் 1987  , Morris  1988 ,   Barrotes 1993  , Solar Sunrise 1998 ) ,  அதிக சேதங்களை உண்டாகிய இரண்டு வைரஸ்களை இந்த பதிவில் காண்போம்.

Melissa 1999  :   இந்த வைரஸ் விளைவித்த சேதம் 300  - 600  மில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.    மார்ச் 26  , 1999  தான் இதன் பிறந்த நாள் ( அன்று தான் இதை வைரஸ் என்று கண்டுபிடித்தார்கள்) .   இந்த உலகத்தில் உள்ள 15  -  20  சதவீத கணிப்பொறிகளை இது சேதப்படுத்தியது.   மைக்ரோசாப்ட் outlook  பயன்படுத்தி மின் அஞ்சல் அனுப்பும் கணிப்பொறிகளை தாக்கும் இவை தானாகவே 50  பேருக்கு மேல் ஒரு கணிப்பொறியில் இருந்து செய்திகளை அனுப்பியது.   " இது உங்களுக்கான தகவல் ,  வேறு ஒருவரிடமும் சொல்லாதீர்கள்"  என்ற தகவலுடன் வந்த இந்த வைரஸ் பிரபல நிறுவனங்கள் ஆன இன்டெல் மற்றும் மைக்ரோசாப்ட் போன்றவற்றையும் விட்டு வைக்கவில்லை.

I  LOVE YOU 2000  :   20 ம் நூற்றாண்டு சந்தித்த மிக மோசமான வைரஸ் இது எனலாம்.   மே 4 ,  2000  தில் இந்த வைரசை Philiphines தேசத்தில் கண்டுபிடித்தார்கள்.   உலகம் முழுவதும் உள்ள இணைய உபயோகிப்பாளர்களில் கிட்டத்தட்ட 10  சதவீதம் பேர் இந்த வைரசினால் பாதிக்கபட்டார்கள்.  இது உண்டாக்கிய சேதம் சுமார் 5 . 5  பில்லியன் டாலர்ஸ் ( ரூ 27500  கோடி , அடேங்கப்பா )  என கணக்கிடப்பட்டுள்ளது.   I  LOVE YOU என்ற தகவலுடன் இந்த வைரஸ் வந்ததால் இது அதே பெயரில் அழைக்கப்பட்டது.   

இந்த வைரஸ்களை யார் தான் உருவாக்குகிறார்கள் என்றால் நிச்சயமாக கைதேர்ந்த கணினி வல்லுனர்கள் தான்.  இவர்கள் ஆக்க பூர்வமாக தங்கள் அறிவை பயன்படுத்த வேண்டும் என்பது தான் நம் அனைவரின் விருப்பமும்
 .

டிஸ்கி :   I LOVE YOU என்ற வார்த்தையை நம்பினேன் அதற்காகவா இவ்வளவு பெரிய தண்டனை என்று யாரோ முணுமுணுக்கிறார்கள் ,  மனைவியை மாத்திரம் லவ் பண்ணுங்கள் ,  ஒரு பிரச்சினையும் வராது .   ஹ.  ஹா ...

Related post



3 கருத்துகள்: