ஞாயிறு, அக்டோபர் 16, 2011

பிரான்சின் மிக பெரிய சூரிய ஒளி மின்சார ஆலை - இன்று ஒரு தகவல்


சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் உத்தியை உலக நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக பயன்படுத்த ஆரம்பித்திருக்கும் இந்த வேலையில் 75  சதவீத மின்சாரத்தை அணு மின் நிலையங்களில் இருந்து பெரும் பிரான்ஸ் நாடு தன்னுடைய் பெரிய சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் அமைப்பை தெற்கு பிரான்சில் உள்ள மலை பகுதியில் அமைத்துள்ளது.
 
 
 
பரப்பளவில் 200  ஹெக்டேர் அதாவது 500  ஏக்கர் அளவில் இந்த சூரிய ஒளி பண்ணை அமைந்துள்ளது.    கிட்டத்தட்ட 90  MWe  மின்சாரம் உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிற இந்த இந்த சூரிய ஒளி பண்ணையில் 113000 சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.    இந்த சூரிய ஒளி பண்ணையை அமைக்க 110  மில்லியன் யுரோ அதாவது 137 மில்லியன் டாலர் செலவாகியுள்ளது.  
 
இந்த சூரிய ஒளிப் பண்ணைதான் பிரான்சின் மிகப் பெரிய சூரிய ஒளிப்பண்ணை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.    நச்சு புகையை கட்டுபடுத்தும் இன்னும் ஒரு திட்டம் இது என்று பிரான்சின் வல்லுனர்கள் அறிவித்துள்ளனர்.
 
டிஸ்கி :   காசு கொஞ்சம் அதிகம் தான் ,  நிலமும் கொஞ்சம் ஜாஸ்தி தான் ,  ஆனால் பசுமையான இந்த மின்சாரத்தை இரத்தின கம்பளம் விரித்து வரவேற்கிறோம் ...
 
 

Related post



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக