செவ்வாய், அக்டோபர் 18, 2011

கடலுக்கடியில் ஒரு உலகம் - ஒரு சுற்றுலா பார்வை


நாமெல்லாம் விடுமுறை நாட்கள் என்றால் ஏதாவது கடற்கரைக்கு செல்வோம்.  நன்கு காற்று வாங்கி விட்டு திரும்பிவிடுவோம்.   சில சுற்றுலா தளங்களில் கடலை நோக்கி அமைக்கப்பட்டிருக்கிற அறைகளை வாங்கி ,  அவைகளில் இருந்து கடலின் அழகை ரசித்திருக்கிறோம்.   ஆனால் கடலுக்குள்ளே ஒரு தாங்கும் விடுதியை அமைத்தால் எப்படி இருக்கும் என்று  நினைத்ததின் விளைவு பிஜூ கடற்கரையில் அமைக்கப்பட்ட இந்த ரிசார்ட்.  
 
 
கடல் மட்டத்தில் இருந்து 40  அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த உலகத்தின் பெயர் Poseidon Undersea Resort .   மொத்தம் 24  அறைகள் இந்த நவீன கடல் உலகத்தில் உள்ளது.   ஒவ்வொரு அறையும் கடலுக்குள் இருக்கும் அழகை ரசிக்கும்படியாக கண்ணாடியால் அமைக்கப்பட்டிருக்கிறது.   ஒவ்வொரு அறையும் தனித்தனியாக பிரித்தெடுக்கும் வசதி கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது.   
 
 
 
 
16  பேர் பயணம் செய்யும் நவீன நீர்மூழ்கி வாகனம் ஒன்றும் இந்த விடுதியுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.   ஒரு வாரத்திற்கு இந்த விடுதியில் தங்குவதற்கு ஒரு நபருக்கு 15000  டாலர் ( ரூ 750000  மட்டும் ) வசூலிக்கப்படுகிறது.
 
டிஸ்கி :  என்ன எல்லாமோ நடக்கிறது ...   நாங்க 7 . 5  லட்சத்தை வைத்து ஒரு வீடே கட்டிருவோமே ....  அப்படின்னு நீங்க கேட்டால் ,  நானும் உங்க கட்சிதான் .  
 
 

Related post



1 கருத்து: