திங்கள், அக்டோபர் 17, 2011

CO2 வை உறிஞ்சும் செயற்கை மரங்கள் - இன்று ஒரு தகவல்


பெருகி வரும் வாகனங்களாலும் ,  தொழிற்சாலைகளாலும் பெருமளவு நச்சு புகையான CO2  வெளியாகி வருவதை நாம் எல்லாரும் அறிந்திருக்கிறோம் .  பெருகி வரும் நச்சு புகைகளினால் உலகம் வேகமாக வெப்பமயமாகி கொண்டு இருப்பதினால் பல மாற்றங்கள் இயற்கையில் உருவாகி வருவதை கண்டு கலங்கிய விஞ்ஞானிகளின் யோசனை தான் இந்த CO2 வை உறிஞ்சும் செயற்கை மரங்கள்.



அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைகழகத்தை சேர்த்த ஆராய்ச்சியாளர்கள் 10  வருடங்களாக முயற்சி செய்து இந்த சிந்தெடிக் செயற்கை மரங்களை உண்டு பண்ணி இருக்கிறார்கள்.   இந்த மரங்கள் பஞ்சு தண்ணீரை உறிஞ்சுவது போல ,  காற்றில் உள்ள CO2 வை உறிஞ்சி அவற்றை சுத்தபடுத்தும் சக்தி கொண்டவை.   இந்த செயற்கை மரங்களின் அளவை நமக்கு தகுந்தாற்போல மாற்றி கொள்ளலாம் என்பது இதன் சிறப்பம்சம்.    ஒரு நாள் முழுவதும் கிட்டத்தட்ட 1  டன் CO2 வை  ( 20  கார்கள் வெளியேற்றும் அளவு )  உறிஞ்சும் என எதிர்பர்க்கபடுகிறது.



இந்த செயற்கை மரங்கள் தற்பொழுது Global Research Technologies ஆய்வுகூடத்தில் உருவாகி கொண்டு இருப்பதாகவும் ,  ஒரு செயற்கை மரத்தை  உண்டாக்க கிட்டத்தட்ட 30000  டாலர் (  ரூபாய் 15  லட்சம் )  செலவாகும் எனவும் ஆய்வு கூடத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் திரு. லக்நேர் தெரிவித்து உள்ளார்.

டிஸ்கி :  நல்ல திட்டம் .  வரவேற்கபட வேண்டியது .  20  கார்கள் ( டீசல் அல்லது பெட்ரோலில் ) ஓடவில்லை எனில் ஒரு மரத்தை மிச்சப்படுத்தலாம் .   என்ன செய்யலாம் தானே ..?


Related post



4 கருத்துகள்: