சனி, நவம்பர் 05, 2011

24 காரட் தங்க ஆடைகள் - இன்று ஒரு தகவல்


தங்கம்  என்று சொன்னாலே நிறைய பேருக்கு ஒரு கிக் தான் .  அதுவும் பெண்களுக்கு சொல்லவே வேண்டாம் .   தங்கம் மீதான மோகம் அமெரிக்க ,  ஐரோப்பிய நாடுகளை விட ஆசிய நாடுகளில் தான் அதிகம் உள்ளது என்கிறது ஒரு ஆய்வு .  இந்த சூழலில் தான் தங்கத்தில் ஆடைகளை (  கழுவக்கூடிய ) உருவாக்கியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள் .


சுவிட்சேர்லண்டை சேர்ந்த பொறியாளர்கள் 10  வருடங்கள் உழைத்து இந்த தங்க ஆடையை உருவாக்கியுள்ளனர்.    ஆடையுடன் இப்படி தங்கத்தை இணைக்க முற்ப்பட்ட முயற்சி முதன்முறை அல்ல .   முன்னாள் ஆராய்ச்சியாளர்கள்,  பட்டு நூலுடன் வெள்ளியை  இணைக்க முறப்பட்டு மெல்லிய நூலை சுற்றிலும் வெள்ளியை போர்த்தி முயற்சி செய்தனர் .  இந்த முயற்சி எதிர்பார்த்த பலன் தரவில்லை எனினும் தங்க ஆடை உருவாக்குவதற்கு ஊன்றுகோலாய் இருந்தது எனலாம்.

 பிளாஸ்மா கோட்டிங் முறையை பயன்படுத்தி இந்த தங்க ஆடைகள் உற்பத்தி செய்யப்படுமாம் .   இந்த தங்க ஆடைகள் முழுவதும் தண்ணீரால் கழுவப்படும் சக்தி கொண்டதாக இருப்பது அதன் சிறப்பு .

 இதை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் ,  தங்கள் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தற்பொழுது 8 கிராம் சுத்த தங்கத்தில்   தங்க கழுத்து பட்டையை         ( Golden Neck Tie ) உருவாக்கி உள்ளார்கள் எனவும் அதின் விலை 7500 ஸ்விஸ் பிரான்க்  ( கிட்டத்தட்ட 8500  டாலர்  , அதாவது சுமார் 425000 ரூபாய் ) மட்டும் தான் .

டிஸ்கி :  இந்த செய்தியை எழுதும் போதே நீங்கள் இப்பொழுது என்ன நினைக்கிறீர்கள் என்பது எனக்கு தெரிகிறது .

  1. 425000 ரூபாய்க்கு ஒரு டை வாங்குவதை விட 20 பவனுக்கு நகை வாங்கி விடுவோம் ..... உண்மை தானே
  2. நிறைய பேர் தன் கல்யாணத்திற்கு மாமனார் வீட்டில் வரதட்சிணையாக கேட்கலாம் ....  உண்மை தான் .   வரதட்சினை கொடுமையில் கேசு போட்டுட்டாங்கன்னா .... இந்த இடுகையும் நானும் பொறுப்பாக முடியாது .  ஹி  .... ஹி.....
  3. ஏம்பா ....! இது கொஞ்சம் ஓவரா இல்ல .....  நானும் உங்க கட்சி தான் ...

Related post



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக