ஞாயிறு, அக்டோபர் 30, 2011

உலகின் அதிவேக மோட்டார் பைக்ஸ் - இன்று ஒரு தகவல்


என்னதான் பல வகையான கார்கள் வந்திருந்தாலும் ,  மோட்டார் பைகில ஏறி அதிவேகத்தில பறந்து போகிற சுகமே தனிதான் என்பது அதை அனுபவித்து பார்த்தவர்களுக்கு தான் தெரியும் .  அப்படி மோட்டார் பைக் வைத்திருக்கிற அநேகர் கார் வாங்காமல் இன்னும் பைக்கில் பறந்து கொண்டு தான் இருக்கிறார்கள் .  அவர்களுக்காக ,  உலகின் அதிவேக மோட்டார் பைக் குறித்த ஒரு தொகுப்பை காணலாம் .



ஐந்தாவது இடம் :   Kawasaki Ninja ZX-14 

 DOHC என்ஜின் தொழில் நுட்பத்தை கொண்டுள்ள இந்த பைக் 1352 CC  என்ஜினை கொண்டுள்ளது.   190 bhp  சக்தியை இந்த இஞ்சின் வெளியிடுகிறது.  அதிகபட்சமாக 190 மைல் / மணி வேகத்தில் இந்த பைக்கில் செல்லமுடியும் .   இதனுடைய விலை 9 ,50 ,000 ரூபாய் மட்டும் தான். 


 நான்காவது இடம் :   Suzuki Hayabusa 


197 bhp  சக்தியை வெளியிடும் 1349 CC இன்ஜினை இந்த பைக் கொண்டுள்ளது.    அதிகபட்சமாக 200 மைல் /  மணி வேகத்தில் இந்த பைக்கில் பறக்கலாம் .   இந்த பைக்கின் விலை 14 ,30 ,000 ரூபாய் மட்டும் தான் . 


மூன்றாவது இடம் :   MTT Turbine Superbike (Y2K Superbike)  

320 bhp  சக்தி கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் டர்பைன் இன்ஜினை இந்த பைக் கொண்டுள்ளது .   அதிகபட்சமாக 230 மைல் /  மணி வேகத்தில் இந்த பைக்கில் பறக்கலாம.   இந்த பைக்கின் விலை 1 ,75 ,000 டாலர் மட்டும் தான் ( அதாவது கிட்டத்தட்ட 87 லட்சம் ருபாய் மட்டும் தான் )


இரண்டாவது இடம்  : MTT Streefighter 


டர்பைன் இஞ்சின் தொழில்நுட்பத்தை கொண்டு இயங்கும் இந்த பைக்கின் சக்தி 420 bhp .  அதிகபட்சமாக 250 மைல் / மணி வேகத்தில் இந்த பைக் பறக்குமாம் .   இதனுடைய விலை 1 ,50 ,000 டாலர் மட்டும் தான் ( அதாவது கிட்டத்தட்ட 75   லட்சம் ருபாய் மட்டும் தான்)


முதல் இடம் :  Dodge Tomahawk  


500 bhp சக்தி கொண்ட வைப்பர் V10 இன்ஜினை கொண்டு இந்த பைக் இயங்குகிறது .   அதிகபட்சமாக 300 மைல் /  மணி வேகத்தில் பறக்கலாம் .   இதனுடைய விலை  5 ,55 ,000 டாலர் மட்டும் தான் ( அதாவது கிட்டத்தட்ட 2 கோடியே 75  லட்சம் ருபாய் மட்டும் தான் ) 


டிஸ்கி :  என்ன நண்பர்களே ..., இதில எந்த பைக்கை வாங்கலாம் என்று பிளான் பண்ணுறீங்க போல .    நாங்கலாம் இந்த ரூபாயில என்னவெல்லாமோ செய்துவிடுவோம் அப்படின்னு சொல்லுற கூட்டத்தில தான் நான் இருக்கேன் . 

Related post



4 கருத்துகள்:

  1. நல்ல தகவல்கள்.
    வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_30.html

    பதிலளிநீக்கு
  2. நமக்கு பைக்குன்னாலே அலர்ஜிப்பா ...

    பதிலளிநீக்கு
  3. @ ரத்னவேல் : ஐயா , தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  4. @ கூடல் பாலா : அண்ணாச்சி ஒரு தடவை ஒட்டி பாருங்க , அலர்ஜி எல்லாம் பறந்து போகும் . தங்கள் வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு