வெள்ளி, நவம்பர் 04, 2011

ஒற்றை சக்கரத்தில் போவோம் பயணம் - இன்று ஒரு தகவல்


பைக் என்று சொன்னாலே குறைந்தது இரண்டு சக்கரம் இருக்கும் என்று நமக்கு தெரியும் .   ஒற்றை சக்கரம் உள்ள பைககுகள் மிக குறைந்த எடையும் , மிக எளிதில் செயல்படும் திறனும் உள்ளதால் , இந்த ஒற்றை சக்கர பைக்கை குறித்த சிறிய தகவலை நாம் பார்க்கலாம் .


RYNO என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஒற்றை சக்கர வாகனம் மின்சக்தியை கொண்டு ஓடக்கூடியது.   அதிகபட்சமாக 40 கிமீ /  மணி வேகத்தில் செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது .   இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள லிதியம் அயன் பாஸ்பேட் பாட்டரி 1 மணி 30  நிமிடங்களுக்குள் முழுவதும் சார்ஜ் செய்யக்கூடிய அளவில் உள்ளது .   




57  கிலோ எடையுடைய ஒரு எளிய வாகனம் தான் இது .   நெடுந்தொலைவுக்கு பயன்படாமல் ,  குறுகிய பயணத்திற்கு இந்த வாகனம் சிறந்தது .   அடுத்த ஆண்டில் விற்ப்பனைக்கு வரவுள்ள இந்த வாகனத்தின் விலை 3500 டாலர் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .

டிஸ்கி :  பிறகு என்ன ..?  டக்குன்னு ஒரு வண்டிக்கு ஆர்டர் கொடுங்க ... பக்கத்திலே இருக்கிற கடைக்கு போய் பந்தாவா எறங்குங்க .....  பாத்துங்க ... வண்டியை கொஞ்சம் கவனமா ஓட்டனும் ...  ஹீரோ ஆக ஆசைப்பட்டு காமடியன் ஆகி விடக்கூடாது ...   ஹி ... ஹி.. 

Related post



1 கருத்து: