வெள்ளி, நவம்பர் 18, 2011

விலை வாசி குறையுமா ...? வாய்ப்பிருக்கிறதா ...?


இப்பொழுது எங்கே பார்த்தாலும் , எதை எடுத்தாலும் விலை அதிகமாகி கொண்டே தான் போகிறது .   எந்த பொருளும் விலை குறைந்த மாதிரி இல்லை என புலம்பும் அநேகரில் நானும் ஒருவன் .   ஒவ்வொரு முறை விலை கூடும் போதும் , விலைவாசியை கட்டுப்படுத்த அரசு தவறி விட்டது என குற்றம் சொல்லுவோரும் உள்ளனர் .  உண்மையில் விலைவாசி குறையுமா ....? அதற்கு வாய்ப்பிருக்கிறதா என்பது டஜன் கேள்வி .

 ஒரு பொருளின் விலை எதை வைத்து நிர்ணயம் செய்யப்படுகிறது என்றால் , அதன் தேவை ( Demand ) மற்றும் உற்பத்தியை ( Supply ) பொருத்தே.  ஒரு சின்ன உதாரணம் காண்போம் ..

10  பேருக்கு ஒரு நாள் அரிசி தேவை   -  10  கிலோ என்று வைத்து கொள்ளுவோம் .   ஆனால் 30  கிலோ அரிசி உற்பத்தி செய்கிறோம் என்றால் உற்பத்தியான அரிசி விற்பனை ஆகவேண்டும் ( விற்பனை ஆனால் தான் விற்றவனும் , உருவாக்கியவனும் சாப்பிடமுடியும் )  என்பதற்காக அதனுடைய விலை சற்றே குறைத்து விற்பனை செய்யப்படும் . 

ஆனால் அதே நேரத்தில் உற்பத்தி 5 கிலோ தான் என்று வைத்துக்கொள்ளுங்கள் .  அதனுடைய தேவை அதிகரிப்பதாலும் ,  உற்பத்தி குறைந்து இருப்பதினாலும் விலை அதிகமாகி விடும் . 


 இது ஒரு சின்ன உதாரணம் தான் .  மிக முக்கியமாக தேவை அதிகரிக்கிறது ஆனால் உற்பத்தி குறைகிறது .   இது தான் சாராம்சம் ...  சரி .. இதற்க்கான காரணங்கள் என்ன என்று பார்ப்போமே ..!

 மக்கள் தொகை பெருக்கம் :   


 இது ஒரு முக்கியமான காரணம் .   ஒவ்வொரு ஆண்டிலும் மக்கள் தொகை இந்தியாவில் பெருகி வருகிறது .  தற்பொழுது 121  கோடியாக இருக்கும் இந்திய மக்கள் தொகை வெகு விரைவில் சீனாவை முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது .  ஒவ்வொரு குழந்தை பிறக்க பிறக்க தேவை அதிகமாகிறது என்று அர்த்தம் .  அதனால் தான் குழந்தை கட்டுப்பாட்டு முறைகள் அரசால் மக்கள் மத்தியில் போதிக்கப்பட்டு வருகிறது .  ஆனால் வழக்கம் போல நாம் அதை கண்டுகொள்வதில்லை என்பது வேறு விஷயம் .... 

 விவசாயத்தின் தேக்கம்  :  


நாட்டின் பல இடங்களில் விவசாயம் அழிந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும் .  ஏன் எனில் விவசாயத்தினால் கிடைக்கும் வருமானம் போதாத காரணத்தினால் வேறு வேலைகளை தேடி விவசாயிகள் பயணமாகிறார்கள் .   அதனால் தான் அரசும் இயன்ற வரையில் இலவச மின்சாரம் , உர மானியம் என்றெல்லாம் பல கொடுக்கிறது .  காரணம் அப்படியாவது விவசாயம் அழியாமல் இருந்தால் உற்பத்தி பெருகுமே ...


ரியல் எஸ்டேட் மோகம்  :


தற்பொழுது நாட்டை பிடித்திருக்கும் மிகப் பெரிய பகைமை இது தான் .   வீடு கட்ட இடம் என்ற நிலை போய் ,  நிலம் வாங்கி விற்பது ஒரு தொழிலாய் மாறின பிறகு , என்னமோ அழிவது எல்லாம் விளை நிலங்கள் தான் .   அதில் தான் நல்ல தண்ணீர் , பசுமை இருப்பதால் விளை நிலங்கள் அழிக்கப்படுகின்றன.  மறைமுகமாக உற்பத்தி அழிக்கப்படுகின்றன ...  


 சர்வதேச சந்தையில் எரிபொருளின் ஏற்ற / இறக்கங்கள் :
நமது எரிபொருள் தேவை சர்வதேச சந்தையை நம்பி இருக்கிற படியால் , எரிபொருள் விலை உயருகிற பொழுது , அதனோடு கூட சேர்ந்து அது சம்பந்தப்பட்ட விலையும் உயர்கிறது . 

நாம் என்ன செய்யலாம்  :-
  1. கூடுமானவரை ..... நாம் இருவர் ...நமக்கு ஒருவர் .....! சரி பரவாயில்லை நமக்கு இருவர் ....
  2. விவசாய நிலம் இருக்குமானால் தலையே போனாலும் விற்பனை செய்ய வேண்டாமே ... ஏதாவது விவசாயம் நடக்கட்டும் .
  3. ரியல் எஸ்டேட் தொழிலை ஆதரிக்கும் வகையில் அதிக நிலங்கள் வேண்டாமே ...
 டிஸ்கி :  இன்னும் சில வருடங்களில் விலை பட்டியல் ...
ஒரு லிட்டர் பெட்ரோல்         -    250  ருபாய் .
ஒரு கிலோ அரிசி                    -      100  ருபாய்
ஒரு கிலோ உப்பு                     -        50   ருபாய்  ( இது கூடவா ..!)


Related post



2 கருத்துகள்:

  1. What I don't understand is how Tamil Nadu government affords to give out FREE stuff at this cost?!

    Makes one wonder - does it not?

    பதிலளிநீக்கு
  2. நல்ல ஒரு பார்வை . இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா ...? புள்ளிகளுடன் ..

    பதிலளிநீக்கு