புதன், ஆகஸ்ட் 31, 2011

நவீன கண்டுபிடிப்புகள் - இன்று ஒரு தகவல்


JET  PACK என்ற நவீன கண்டுபிடிப்பு மிகவும் அற்புதமான ஒரு கண்டுபிடிப்புதற்கால உலகின் தலை சிறந்த 50  கண்டுபிடிப்புகளில் ஒன்றாக டைம்ஸ் பத்திரிகை இதை குறித்து எழுதியுள்ளது. (பக்கத்தில் காணப்படும் படத்தை பார்க்க)


இரட்டை இறகுகள் மற்றும் இயற்கை வாயுவை எரிபொருளாக கொண்டு இயங்கும் இந்த நவீன பறக்கும் இயந்திரத்தை களென் மார்டின் என்ற நியூசீலாந்து கண்டுபிடிப்பாளர் சுமார் 30 ஆண்டுகள் போராடி கண்டுபிடித்துள்ளார்.

இதனுடைய சிறப்பம்சம் என்னவென்றால் இது  செங்குத்தாக  மேல கிளம்பி செங்குத்தாக இறங்கும் சக்தி வாய்ந்ததுதனி நபர் மாத்திரம் பயணிக்க முடியும். மிகவும் எடை குறைந்தது. சுமார் 2438 மீட்டர் (8000 அடி) உயரம் வரை பறக்கும் சக்தி படைத்தது. அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் ( 60 மைல் ) வேகத்தில் நாம் பயணிக்க முடியும். தொடர்ந்து 30 நிமிடங்கள் பயணிக்க முடியும். ஒரு சிறிய parachute இதனுடன் இணைக்கபட்டிருக்கிறது.

அவசரகால நடவடிக்கைகள், மீட்பு பணிகள் மற்றும் இராணுவத்தினால் இது மிகவும் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த பறக்கும் இயந்திரம் மிகவும் இலகு ரக விமான பிரிவில் வகைபடுத்தபட்டுள்ளதால், இதை இயக்குவதற்கு பல நாடுகளில் தனியாக உரிமம் பெற வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் தேவையான அளவு பயிற்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வெகு விரைவில் இந்த பறக்கும் இயந்திரம் நமது தலைக்கு மேல் பறப்பதை நாம் பார்க்கலாம். இதனுடைய தற்போதைய விலை வெறும் 100000 டாலர் ( இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 47 லட்சம் ருபாய் ) மாத்திரமே.

இதை கண்டுபிடித்த அண்ணாச்சி மார்டினுக்கு ஒரு சலாம் போட்டுவிட்டுஉங்களுக்கு என்ன சொல்லவேண்டும் என்று தோன்றுகிறதோ அதை அப்படியே சொல்லலாமே....

Related post



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக