வியாழன், செப்டம்பர் 01, 2011

அற்புதமான பாலம் - அதிர வைக்கும் வடிவமைப்பு - இன்று ஒரு தகவல்

இத்தாலிய வடிவமைப்பாளர்கள் 3 பேர் சேர்ந்து ( பிரான்செஸ்கோ   கோலாரோச்சி , கியோவன்ன  சரசினோ  மற்றும்  லூசா  சரசினோ ) ஒரு பிரமாண்டமான பாலத்தை வடிவமைத்துள்ளார்கள். நிஜத்தில் இந்த கட்டுமானம் முடிவடைந்தால் , உலகம் போற்றும் பேரதிசயம் ஆகும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.


இந்த பிரமாண்டமான வடிவமைப்பு ஒரு பள்ளத்தாக்கின் மேல் கட்டப்படும் ஒரு பாலத்தின் மாதிரி. ஆனால் விசேஷம் என்னவெனில் பெரிய காற்று விசையாழிகள் ( WIND TURBINES ) , இதனுடைய தூண்களுக்கு நடுவே நிறுவப்பட்டிருக்கும். மிக உயரத்தில் இந்த பாலம் அமைய போகிறதால் , காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் எனவும் அதன் மூலம் தேவையான அளவு மின்சாரம் தயாரிக்க முடியும் எனவும் கருதபடுகிறது.
 
இது மிகவும் நீண்ட பாலமாக இருக்க போகிறதால் , இதனுடைய சாலை முழுவதும் சூரிய ஒளி தகடுகளால் கூரை அமைக்கப்படும் எனவும் தெரிகிறது. இதன் மூலமும் மின்சாரம் பெருமளவில் தயாரிக்கப்படும்.  கூடுதலாக ஒரு சூரிய ஒளி பூங்காவும் இந்த பாலத்தில் பொழுதுபோக்கிற்காக அமைக்கபடுகிறது.
 

இந்த பாலம் மூலம் ஒரு வருடத்திற்கு சுமார் 40 மில்லியன் KWh  மின்சாரம் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

அற்புதமான பாலம் - அதிர வைக்கும் வடிவமைப்பு                                         - பசுமையான பள்ளத்தாக்கின் மேலே பசுமையான திட்டங்கள்

Related post



2 கருத்துகள்: