வியாழன், செப்டம்பர் 01, 2011

இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்

பெருகி வரும் நோய்கள் ஒரு பக்கம் , விபத்துகள் மறுபக்கம் ,  சாலைகளில் வேகமாக செல்லும் அவசர ஊர்திகள் , இவைகளை எல்லாம் பார்க்கும்போது மனித உயிர்கள் எதிர்கொள்ளுகிற  போராட்டங்களை அறிந்து கொள்ளமுடியும். இந்த மாதிரி சமயங்களில் இரத்த தானம் பல உயிர்களை காப்பாற்றுவதை நாம் அறிந்திருக்கிறோம். இதை பற்றி ஒரு சிறு கண்ணோட்டத்தை நாம் காண்போம்.
 
  • ஒரு புதியதாய் பிறந்த குழந்தைக்கு 1 கப் இரத்தம் காணப்படும்.
  • மனித உடலின் எடையில் 7% இரத்தத்தின் எடையாகும்.
  • பொதுவாக வயது வந்தவர்களுக்கு 10 Pint  ( 1 / 8  of  Gallon) அளவு இரத்தம் இருக்கும்.
  • நான்கு முக்கிய வகை இரத்தப்பிரிவுகள் உள்ளன. அவை "A ","B ","AB "  மற்றும் "O "  
  • ஒரு unit  இரத்தத்தை நாம் பல கூறுகளாக பிரிக்கமுடியும். அவை இரத்த சிவப்பணுக்கள் , இரத்த வெள்ளை அணுக்கள் , இரத்த தட்டுகள் ,  மற்றும் இரத்த பிளாஸ்மா .
  • இரத்த சிவப்பணுக்கள் உடலின் உறுப்புகளுக்கும் , திசுக்களுக்கும்  ஆக்சிஜனை சுமந்து செல்கிறது. 
  • ஓரிரு துளி இரத்தத்தில் கிட்டத்தட்ட 1 பில்லியன் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.
  • தானம் செய்யப்பட்ட இரத்த சிவப்பணுக்கள் 42  நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்
  • இரத்த வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது.
  • இரத்த தட்டுகள் இரத்தம் உறைவதை ஊக்குவிக்கிறது .
  • தானம் செய்யப்பட்ட இரத்த தட்டுகள் 5  நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
  • இரத்த பிளாஸ்மா என்னபடுவது 90 % நீர் சத்து நிறைந்தது. மொத்த இரத்ததில் 55 % கொள்ளளவை கொண்டுள்ளது.
  • பிளாஸ்மாக்கள் உறைய வைக்கப்பட்டு 1 வருடம் வரை பயன்படுத்த கூடும்.
 மருத்துவமனைக்கு செல்லும் 10 நபர்களில் ஒருவருக்கு இரத்தம் தேவைபடுகிறது.  பல லட்சகணக்கான உயிர்கள் சரியான சமயத்தில் இரத்தம் கிடைக்காமல் மடிகின்றன. கொடிய தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தது 20 யூனிட் இரத்த தட்டுகள் தேவைபடுகிறது. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு குறைந்தது 120 யூனிட் இரத்த தட்டுகளும் 20 யூனிட் இரத்த சிவப்பணுக்களும் தேவைபடுகிறது.  இவையெல்லாம் ஒரு சிறு கணக்குகள் மாத்திரமே...

இரத்தம் தானம் செய்வதால் உடல் நலன் கேட்டு போகாது. குறைந்தது 17 வயது நிரம்பியவர்கள் தானம் செய்யலாம். திடகாத்திரமுள்ளவர்கள் 56 நாட்களுக்கு ஒரு முறை தானம் செய்யலாம். 17 % ஜனங்கள் இரத்த தானம் செய்வதை குறித்து நினைத்து கூட பார்க்கவில்லை என்கிறார்கள். 15 % ஜனங்கள் எங்களுக்கு சமயமில்லை என்கிறார்கள். 1 % ஜனங்கள் நாங்கள் மற்றவர்களை நேசிக்கிறோம் என்கிறார்கள். எங்கோ ஒரு மூலையில் ஒரு உயிர் இரத்ததிர்க்காய் ஏங்கி கொண்டிருக்க, நாம் ஏன் இருக்க முடியாது அந்த 1 % ல் .....



 
 

Related post



2 கருத்துகள்:

  1. Let me explain my experience. Once in college - during B.Sc there was a blood bank at college and when I went for it I was let go because I didn't have the bare minimum 50 kg weight limit then...

    Then here in the USA one of our friends went to donate at his work place and he was refused because he hadn't been in the US for 3 years full.

    So, what can we do?!

    பதிலளிநீக்கு
  2. I think ... in US, only registered voters are allowed to donate blood. But in India.., any healthy person can donate blood.

    Thanks for sharing

    பதிலளிநீக்கு