பனிப் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்கள் இக்லூ என்ற வீட்டில் வசிப்பார்கள் என்று சிறு வயதில் பள்ளிக்கூடத்தில் படித்த நியாபகம். அப்படி ஒரு அனுபவத்திற்காக ஏங்கிய நாட்களும் உண்டு. உண்மையில் இப்படி ஒரு பனிப்பிரதேசத்தின் இரவை கழிப்பதற்காக இக்லூ போன்ற தங்கும் அறைகளை அமைத்துள்ளது Kakslauttanen என்ற ஹோட்டல் . பின்லாந்திற்க்கு அடுத்துள்ள ஆர்டிக் பிரதேசமான Urho Kekkonen National பார்க் ல் தான் இந்த இக்லூ அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு 20 கண்ணாடியால் ஆன இக்லூ வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. உறைந்து போவதில் இருந்து பாதுகாக்கவும் , மிதமான வெப்பத்தை வீட்டின் உள்ளே நிலைப்படுத்தவும் இந்த வீடு முழுவதும் விசேஷித்த வெப்ப கண்ணாடிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகபட்சமாக மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் வரையிலும் இந்த வீட்டின் உள்ளே தங்கி இருந்து இயற்கை அழகை ரசிக்க முடியும்.
இந்த இடத்தில ஐஸ் கட்டியில் செய்த ஒரு உணவகமும் , விருந்தினர்கள் பொழுது போக்கிற்காக ஐஸ் பிஷிங் மற்றும் பனிமான் வண்டியில் சவாரி போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாம். 2012 ம் வருடம் இன்னும் 33 இக்லூ வீடுகளை இந்த இக்லூ கிராமத்தில் உருவாக்க திட்டம் உள்ளதாம்.
டிஸ்கி : யாரோ வேக வேகமாக இப்பொழுதே புறப்படுகிறது போல தோன்றுகிறது. கொஞ்சம் பொறுங்கள் டிசம்பர் மாத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரைக்கும் தான் இந்த இக்லூ கிராமத்தில் தங்கும் வசதியாம். போய் விட்டு வந்தவுடன் உங்கள் அனுபவத்தை கொஞ்சம் எழுதுங்களேன்.
Source : http://www.kakslauttanen.fi/en
Good one!
பதிலளிநீக்கு