சைக்கிள் என்ற வாகனத்தை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது . சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை இன்று வரை விரும்பி ஓட்டும் ஒரு வாகனம் என்றால் அது சைக்கிள் தான் . சுற்று சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத இந்த வாகனங்களின் எண்ணிகை தற்பொழுது குறைந்து வந்தாலும் , சைக்கிள் ஓட்டுவதின் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று மார் தட்டுகின்றனர் ஜெர்மனியை சேர்ந்த சில்வர் பக் கம்பெனி .
Starke 1 மற்றும் Stark 2 என்ற 2 மாடல்களில் இந்த நிறுவனம் சைக்கிள்களை தயாரித்துள்ளது. இந்த சைக்கிள் உடன் ஒவ்வொரு USB Port இணைக்கப்பட்டுள்ளது . இந்த சைக்கிள் ஓட்டப்படும் பொழுது Dynamo வில் உருவாகும் மின்சாரம் இந்த போர்ட் வழியாக மொபைல் போன் மற்றும் MP3 பிளேயர் போன்றவற்றை சார்ஜ் செய்ய பயன்படுத்தலாம் . அட ...!
Stark 1 மாடல் 12 . 5 கிலோ எடையும் , Stark 2 மாடல் 11 . 9 கிலோ எடையும் உள்ளதாக கிடைக்கிறதாம் . இந்த Stark 1 மாடல் சைக்கிள் 1 . 5 மணி நேரம் ( 32 கிலோ மீட்டர் ) இயங்கத்தக்க ஒரு மின் மோட்டார் ஒன்றும் உள்ளதாம் .
டிஸ்கி : எப்படியோ ... எல்லா வழிகளிலும் மின்சாரம் தயாரிக்க கண்டுபிடித்து கொண்டு இருக்கிறார்கள் . புதிய அறிமுகங்களை நாம் எதிர்பார்த்து காத்திருப்போம் .
ithula nalla tha iruku. namma oorula epa indha cycle sales ku varuthu
பதிலளிநீக்கு99 ரூபா பூஸ்டர் பேக் போடுங்க! 30 நாளைக்கு நான் ஸ்டாப் அ பேசுங்க!
மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் பண்ணுங்க