நம்மில் பல பேர் சாப்பிட்ட சாப்பாடு ஜீரணம் ஆகாமல் அஜீரண கோளாறுகளால் கஷ்டப்படுவதை அறிந்திருக்கிறோம் . இதற்காகவே பல மருந்துகளை மருந்து கம்பனிகள் தயாரித்தும் வருகின்றன . ஆனால் இந்த மாதிரியான அஜீரண கோளாறுகள் கீழ்க்கண்ட எளிய மருத்துவத்தை பயன்படுத்தினால் நீங்கி நல்ல பலன் கிடைப்பதை பார்க்கலாம் .
விசேஷ நாட்களில் பலகாரம் சாப்பிடுவதால் உண்டாகும் அஜீரணம் , பசியின்மை , வயிறு உப்பி காணப்படுதல் , உடல் வலி , அசதி முதலியவைகளுக்கு வீட்டிலேயே தயாரிக்கும் சுக்கு தண்ணீர் சிறந்தது . 2 பெரிய சுக்கு , 2 ஏலக்காய் இவற்றை நசுக்கி கொண்டு ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து , 2 டம்ளர் நீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்து , முக்கால் தம்ளராக சுண்டியவுடன் கருப்பட்டி ( பனை வெல்லம் ) அல்லது சாதாரண வெல்லத்துடன் கலந்து குடித்து வந்தால் அணைத்து அஜீரண கோளாறுகளும் நீங்கி உடம்பு கலகலப்பாக இருக்கும் .
ஓமம் - 200 கிராம் , சீரகம் - 100 கிராம் , மிளகு - 100 கிராம் , கருஞ்சீரகம் - 100 கிராம் , பூண்டு - 50 கிராம் , கறிவேப்பிலை - 100 கிராம் , தோல் நீக்கிய சுக்கு - 200 கிராம் ஆகியவற்றை லேசாக நல்லெண்ணையில் வரித்து பொடி செய்து தினசரி பகல் உணவில் 2 ஸ்பூன் 1 பிடி சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வர செரிமானம் நல்ல நிலையில் ஆகி வயிற்று கோளாறு இன்றி சுகமாக இருக்கலாம் .
தினசரி 4 பேரீச்சம் பழம் சாப்பிடுபவர்களுக்கு வயிற்று கடுப்பு , அஜீரண பேதி , மலசிக்கல் போன்ற வயிற்று கோளாறுகள் வருவதில்லை .
சுக்கு பொடியுடன் சுடு நீரை சேர்த்து குடித்தாலும் அஜீரணத்தில் இருந்து நல்ல சுகம் கிடைக்கும் .
நன்றி : குலசை சுல்தான்
ஒரு சிட்டிக்கை பெருங்காயத்தை விழுங்கிவிட்டு ஒரு தம்ளர் வெந்நீர் குடித்தால் அஜீரணம் ஓடியே போச்சு.
பதிலளிநீக்குPoye pochi! Poyindhe! It's gone!
பதிலளிநீக்கு@ DrPKandaswamyPhD : ஐயா தங்கள் முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் மிக்க நன்றி
பதிலளிநீக்கு@NRIGirl : Its gone....? Ha..ha.. thanks for your continuous encouragement
பதிலளிநீக்குநன்றாக உள்ளது
பதிலளிநீக்கு