வியாழன், அக்டோபர் 27, 2011

சக்கரங்களின் மேல் ஒரு அரண்மனை - ஒரு சுற்றுலா தகவல்


Palace On Wheels என அழைக்கப்படும் சொகுசு சுற்றுலா தொடர்வண்டியை  ( Luxury Tourism Train )  குறித்து இந்த கட்டுரையில் நாம் காண்போம் .   இந்த தொடர்வண்டி இந்திய ரயில்வே துறையால் ராஜஸ்தான் மாநிலத்தின் சுற்றுலா துறையை ஊக்குவிக்கும்பொருட்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு சொகுசு தொடர்வண்டியாகும் .   1982 ம் வருடம் ஜனவரி மாதம் 26 ம் தேதி இந்த சொகுசு தொடர்வண்டியின் சேவை ஆரம்பிக்கப்பட்டது. 


 1990 ம் ஆண்டு முழுவதும் குளிர்சாதன வசதியுடன் மாற்றப்பட்ட இந்த சொகுசு தொடர்வண்டி 13 பெட்டிகள்,  2 உணவகங்கள் , 1  பார் மற்றும் 4  சேவை பெட்டிகளுடன் மீட்டர் காஜ் தண்டவாளத்தில் வளம் வந்தது.  பின்னர்  1995 ம் வருடம் முழுவதும் மாற்றப்பட்ட 14 பெட்டிகள்  , 2 உணவகங்கள் , 1 பார் மற்றும் 4 சேவை பெட்டிகளுடன்  அகல இருப்புப்பாதையில் தன் பயணத்தை தொடர்கிறது.  



ஒவ்வொரு பெட்டிகளும் 4  தூங்கும் அறைகள் உள்ளதை உள்ளது .  தூங்கும் அறைகள் நன்கு அலங்கரிக்கப்பட்ட பர்னிச்சர்கள் ,  ஓவியங்கள் , மற்றும் கைவேலை பொருட்களை கொண்டுள்ளது .  ஒவ்வொரு அறைக்கும் கழிப்பிட வசதி இணைக்கப்பட்டுள்ளது.   இந்த 14  பெட்டிகளும்  ராஜஸ்தான் மாநிலத்தின் 14 முக்கிய இடங்களின் பெயர்களால் ( Alwar, Bharatpur, Bikaner, Bundi, Dholpur, Dungarpur, Jaipur, Jaisalmer, Jhalawar, Jodhpur, Kishangarh, Kota, Sirohi, and Udaipur. ) அழைக்கப்படுகிறது .   


மிக அழகான ,  சுத்தமான ,  சுவை தரும் உணவுகள் கிடைக்கும் 2 உணவகங்கள் ( பெயர்கள் :  மகாராஜா மற்றும் மகாராணி )   இந்த சொகுசு தொடர்வண்டியுடன் இணைக்கப்பட்டுள்ளது.    டெல்லியில் இருந்து புறப்படும் இந்த தொடர்வண்டி  ஜெய்ப்பூர்  , ஜெய்சல்மர் ,  ஜோட்ப்பூர் ,   சவாய் மதிபூர் ,  உதய்ப்பூர் , பரத்ப்பூர் , மற்றும் ஆக்ரா வரை சுற்றியோடுகிறது ...


இந்த தொடர்வண்டியில் பயணிக்கும் அனுபவமும்  , அது சுற்றியோடுகிற இடங்களில் கிடைக்கும் பயண அனுபவங்களும் வாழ்வில் மறக்கமுடியாதவை என்றால் அது மிகையாகாது .  



Related post



5 கருத்துகள்:

  1. இந்த தொடர்வண்டியில் பயணிக்கும் அனுபவமும் , அது சுற்றியோடுகிற இடங்களில் கிடைக்கும் பயண அனுபவங்களும் வாழ்வில் மறக்கமுடியாதவை என்றால் அது மிகையாகாது .


    அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. நமக்கு இதுல போக ஏதாவது வாய்ப்பிருக்கா தம்பி ?

    பதிலளிநீக்கு
  3. பிளாக்கர் செட்டிங் டேப் சென்று தேதியை இயல்பு நிலைக்கு மாற்றலாம் ...

    பதிலளிநீக்கு
  4. @ ராஜராஜேஸ்வரி : தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  5. @ கூடல் பாலா : அண்ணாச்சி வாங்க .. , தங்களின் அறிவுரைப்படி தேதி மாற்றிவிட்டேன் . நன்றி , நாம் கூட இந்த வண்டியில் போகலாம் . ஒரு ராத்திரிக்கு ஒரு நபருக்கு 500 டாலர் மட்டும் தான் கட்டணம் . கொஞ்சம் அப்படியே இந்த தளத்தில் புக் பண்ணிடுங்க .,. http://www.palacesonwheels.com/india/tariff-departure.html . நமக்கெலாம் இது சாதாரணமப்பா அப்படின்னு நீங்க சொல்றது என் காதில கேட்ட போல இருக்கு .....

    தங்கள் வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு