செவ்வாய், அக்டோபர் 25, 2011

உலகின் அதிவேக விமானங்கள் - ஒரு அதிவேக பார்வை


விமானங்கள் என்றாலே அதிவேகமாக பறக்கும் சக்தி கொண்டவை என்பது நம் எல்லாருக்கும் நன்கு தெரியும் .    உலகின் அதிவேகமான விமானங்களை குறித்த தகவலை நாம் காண்போமே ...! 
5 வது இடம்   :   MIG 25 -  FOX BAT  




ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் அதிகபட்ச உயரமாக 80000 அடி வரை பறக்கும் சக்தி படைத்தது.   இதனுடைய அதிகபட்ச வேகம்  3.2  மாக் .   இரண்டு Tumansky R-15B-300 இஞ்சின்கள் இந்த விமானத்தின் சக்திக்கு காரணம் .  


4 வது இடம்   :   SR-71 BlackBird


 U  -  2  என்ற விமானத்தின் மேம்பட்ட விமானமாக இந்த விமானம் 1960 ல் அமெரிக்காவில் வடிவைக்கப்பட்டது.    இது அதிகபட்சம் 100000 அடி உயரம் வரை பறக்கும் சக்தி படைத்தது.   இதனுடைய அதிகபட்ச வேகம்   சுமார் 3.5  மாக் .    40  வருடங்களாக அமெரிக்க விமான படையில் பணியாற்றிய இந்த ரக விமானங்கள் 1998 ல் ஒய்வு பெற்றது .

3 வது இடம்  :  X-15   :


உலகின் மூன்றாவது அதிவேக விமானம் இது .  இது அதிகபட்சம் சுமார் 354330 அடி வரை பார்க்கும் சக்தி கொண்டது.   இதனுடைய அதிகபட்ச வேகம் சுமார்  6. 72 மாக்.     நீர்ம ஆக்சிசனை எரிபொருளாக பயன்படுத்தும் இரண்டு Thiokol XLR99-RM-2 இஞ்சின்கள் இதற்க்கு சக்தி கொடுக்கின்றன .  இந்த விமானம் ஓன்று தயாரிக்க சுமார் 300 மில்லியன் டாலர் செலவாகுமாம்.   இதுவும் அமெரிக்காவின் படைப்புதான் 


2 வது இடம்  :   X-43A   

அமெரிக்காவின்  நாசா விண்வெளி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது இந்த விமானம் .   ஹைபர்சானிக் வகையை சேர்ந்த இந்த விமானத்தின் அதிகபட்ச வேகம் சுமார் 9.8  மாக் .    நீர்ம ஹைட்ரசனை எரிபொருளாக கொண்டு இயங்கும் இன்ஜின்களை கொண்டுள்ளது.   
முதல் இடம் -   விண்வெளி ஓடங்கள்  :  





விண்வெளிக்கு சென்று பூமிக்கு திரும்பும் ஆற்றல் கொண்ட இந்த விமானங்கள் சக்தி வாய்ந்த இஞ்சின்கள் மற்றும் ராக்கெட் பூஷ்டர்களை கொண்டு இயக்கப்படுகிறது.   இதனுடைய அதிகபட்ச வேகம் 20 மாக் 

டிஸ்கி :  இப்பொழுது நிறைய பேருக்கு மாக் என்றால் என்ன என்று தோன்றுகிறது .  மாக்  =   பறக்கும் பொருளின் வேகம்  / காற்றில் ஒலியின் வேகம் .    இந்த விமானங்களை விட வேகமாக பறக்கும் ஒரு காரியம் இருக்கிறது.   அதனுடைய வேகம் 100  மாக் என வைத்துக்கொள்ளுங்கள்.   அப்படியா ..?    அட ஆமாங்க ... அதான் நம்ம கற்பனை .....   கற்பனை குதிரையை தட்டிவிடுங்க..... ஒரு செகண்ட்ல இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு போகலாம் .   ஹ ...ஹா. .. 


Related post



1 கருத்து: