வெள்ளி, அக்டோபர் 28, 2011

பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்


விமானங்கள் இல்லாத ஒரு காலத்தை நம்மால் யோசித்து கூட பார்க்கமுடியாத சூழலில் நாம் இருக்கிறோம் .    சென்னையில் Breakfast ,  டெல்லியில் Lunch  , கல்கத்தாவில் Dinner , இதெல்லாம் சாத்தியமா என்றால் ,  விமானத்தின் மூலம் சாத்தியம் என்று தான் சொல்ல தோன்றுகிறது.   உலகம் முழுவதும் இதற்காக பல விமானதளங்களும் ( Airport ) ,  லட்சகணக்கான விமானங்களும் இயங்கி வருகின்றன.   இந்த சூழலில் , இன்னும் பெருகி வரும் விமான தேவையை சந்திப்பதற்கு என்ன செய்யலாம் என்று நினைத்ததின் விளைவு தான் இந்த பறக்கும் விமானதளம் . 



Airborne Metro என்று அழைக்கப்படும் இந்த விமானதளம்  ஒரு பெரிய பறக்கும் விமானம் தான் .   ஆமா ... இந்த விமானம் பறந்து கொண்டு  இருக்கும் போது , பிற குட்டி விமானங்கள் இந்த விமானத்தில் வந்து இறங்கி பின் பிரயாணிகளை என்று கொண்டு பறந்து போகும் .  உதாரனத்திற்க்கு  , நாம் இப்பொழுது அமெரிக்கா போகவேண்டுமெனில் சிலவேளை Honkong போய் வேறு விமானத்தில் ஏறவேண்டும் .   ஆனால் அப்படி இன்னும் ஒரு விமானதளத்தில் நாம் இறங்குவதற்கு பதில் நமது விமானம் இந்த பறக்கும் விமானதளத்தில் இறங்கும் .  அதில் கொஞ்ச நேரம் பயணம் செய்தபிறகு அங்கிருந்து வேறு விமானம் நம்மை நாம் விரும்பும் இடத்திற்கு கொண்டு போகும் . 

Airborne Metro என்று அழைக்கப்படும்  இந்த பறக்கும் விமானதளத்தில் கிட்டத்தட்ட 3000  பேர் பயணிக்கும்  / தங்கியிருக்கும் வசதியும் குட்டி விமானங்கள் இறங்குவதற்கான வசதிகளும் செய்யப்பட்டிருக்கும் .

இவ்வளவு  பெரிய விமானம் தரை இறங்கி பின் ஆகாயத்தில் பறக்க வேண்டுமானால் சந்தேகமில்லாமல் அதற்க்கு ஆகும் எரிபொருள் தேவை மிக அதிகம் .   அதனால் இந்த விமானத்தின் எரிபொருள் தேவையை அணுசக்தியின்  மூலம் சந்திக்கவும்  ,  தொடர்ந்து வானத்தில் பறந்து கொண்டேயிருக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.   இதன் மூலம் 600 மைல் பிரயாணம் செய்தால் 40  சதவீதம் எரிபொருளும்  , 6000  மைல் பயணம் செய்தால் 80 சதவீதம் எரிபொருளும் சேமிக்கப்படும் என்கின்றனர் இதை வடிவமைத்த பொறியியல் வல்லுனர்கள் ....

டிஸ்கி  :  அட என்னவெல்லாம் யோசிக்கிறாங்க ..... நல்லாத்தான் இருக்கு  .... வருங்காலங்களில் நெருக்கடியை சமாளிக்க இந்த மாதிரி திட்டங்கள் தேவை தான்


நன்றி : தி ஏவியேசன் வீக்


Related post



2 கருத்துகள்: