ஞாயிறு, அக்டோபர் 23, 2011

மேகங்களோடு பறக்கலாம் - செயற்கை மேகத்தில் - இன்று ஒரு தகவல்


சில நாட்களில் வானத்தை அண்ணாந்து பார்த்தால் கூட்டம் கூட்டமாக செல்லும் மேகங்களின் அழகை வார்த்தை கொண்டு வர்ணிக்க இயலாது .   அப்படிப்பட்ட மேகங்களின் மீது TOM  & JERRY பயணிக்கும் காட்சியை அடிக்கடி Cartoon தொலைக்கட்சியில் பார்க்கவும் செய்திருக்கிறேன்.   அப்படி பட்ட மேகங்களின் மேல் இன்னொரு செயற்கை மேகம் செய்து அதில் பயணம் செய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தார் நியூயார்க் யை சேர்ந்த Tiago Baarros என்ற வடிவமைப்பாளர் .  அதனுடைய தொடர்ச்சிதான் இந்த சாதனை திட்டம் 



Passing cloud என்று இந்த செயற்கை மேகத்திற்கு பெயர் இடப்பட்டுள்ளதாம்.   கடின உழைப்பு கொண்ட பலூன்கள் பலவற்றின் தொகுப்பு நாள் Stainless Steel முலாம் கொண்டு இந்த செயற்கை மேகம் உருவாக்கப்ப்படுமாம்.   இந்த திட்டத்தை வடிவமைத்தவர் மேகங்களின் மேல் நாம் செல்லும் உணர்வு நமக்கு உண்டாக வேண்டும் என்பதற்காக அதில் ஒரு ஏணியை பொருத்தும் திட்டமும் உள்ளதாம் .  அதனால் அதில் பயணிப்பவர்கள் இந்த செயற்கை மேகத்தின் மேல் ஏறி அந்த உணரவை பெறலாமாம்.  ( அட .. )

இது இப்பொழுது தான் ஆராய்ச்சி கட்டுரையாக  life at the Speed Of the Rail என்ற பன்னாட்டு போட்டியில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாம் .   இதில் இன்னும் ஒரு முக்கியமான விடயம் .. இந்த செயற்கை மேகம் காற்று அடிக்கும் திசையில் அது பாட்டுக்கு போய கொண்டே இருக்குமாம் .   அய்யோடா ...

டிஸ்கி :  இப்ப யாரோ நினைக்கிறாங்க ,  வரட்டும் இந்த திட்டம் ... உனக்கு ஒரு டிக்கெட்ட வாங்கி அப்படியே காற்றோட போ என்று அனுப்பி விட்டுட்டு தான் வேற வேலை அப்படின்னு ....   சாமி நான் தப்பு பண்ணியிருந்தா மன்னிச்சிடுங்க ....   

 

Related post



2 கருத்துகள்:

  1. So cool. I am reminded of my favorite song: "Vaanathil, vaanathil, nadu vaanathil! Yesuvin kaigalil naan iruppen! Paraman Yesuvin punnagain mugam yen kangalil ullatthil niraindhu nirkum!"

    Joseph! If you come across this song in any CD please buy it for me. Tell Grace Ebenezer too to be on the lookout as she attends/conducts many conventions and is involved in music ministries...

    பதிலளிநீக்கு