புதன், அக்டோபர் 26, 2011

அமெரிக்கா ரஷ்யா இடையில் சுரங்க ரயில் பாதை - இன்று ஒரு தகவல்


அமெரிக்கா , ரஷ்யா  இரண்டு நாடுகளும் மிக மிக முக்கியமான நாடுகளாய் உலக அரசியலில் திகழ்ந்தவை மற்றும் திகழ்ந்து கொண்டு இருப்பவை .    இந்த நிலையில் ரஷ்யாவின் சைபீரியா பகுதியையும் அமெரிக்காவின் வடக்கு பகுதியான அலாஸ்காவையும் ரயில் பாதைகளில் இணைக்கும் மாபெரும் திட்டத்தை ரஷ்யா அரசு அறிவித்துள்ளது.  


இந்த இரண்டு கண்டங்களையும் இணைக்கும் மகத்தான திட்டம் 65 மைல் கொண்ட பெரிய சுரங்க பாதையை Bering Straight என்ற பகுதியில் கொண்டுள்ளது.  இந்த சுரங்கபாதை  England மற்றும் France யை இணைக்கும் Chunnel சுரங்கத்தை விட இரு மடங்கு நீளமுடையது.    மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தில் சுரங்க பாதைக்கு மாத்திரம் 10 - 12 பில்லியன் டாலர் ஆகும் எனவும் மொத்த ரயில்வே பாதையும் ஏற்ப்படுத்த 65 மில்லியன் டாலர் ஆகும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.  

இந்த மாபெரும் பாதையில் அலையில் இருந்தும் காற்றில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கு தேவையான் ஆலைகள் நிறுவப்படும் எனவும் அதன் மூலம் 10 ஜிகா வாட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்படும் எனவும் தெரிகிறது.  


வருடத்திற்கு 100 மில்லியன் டன் சரக்குகள் இந்த பாதையின் மூலம் அனுப்பப்படும் எனவும் பல லட்சம் பேர் இதி பிரயாணம் செய்வார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.   ஆசியாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் இந்த ரயில் பாதை கட்டிமுடிக்க 15 வருடங்கள் ஆகுமாம்.

நன்றி :  Times on Line



Related post



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக